தென்னவன் மறவன்

தென்னவன் மறவன் என்று போற்றப்படுபவன் சிறுகுடி கிழான் பண்ணன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்னும் புலவர் இவனது கொடைத்தன்மையைப் போற்றிப் பாடியுள்ளார். [1] இந்தப் பாடல் சிதைந்த நிலையில் உள்ளது. என்றாலும் தெளிவான கருத்துகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறது.

"வினைப் பகடு ஏற்ற மேழி" என்னும் தொடர் இவன் உழவன் என்பதைத் தெளிபடுத்துறது.
"தென்னவன் மறவன்" என்று இவன் குறிப்பிடப்படுவதால் இவன் பாண்டியனுக்குப் படைத்தலைவனாக விளங்கினான் என்பது புலனாகிறது. [2] "பெரும்பெயர்" என்று பாடலில் வரும் தொடர் இவனைக் குறிக்கிறது போலும். இவன் தன்னைப் பாதுகாக்கும் அரசன் வழுதி என்று குறிப்பிடுகிறான். [3]

வெள்ளிக் கோள் சூரியன் தோன்று திசைக்குத் தெற்குப் பக்கம் தோன்றினால் மழை பெய்யாது என்பது தமிழர் கண்ட வானியல். [4] இப்படிப்பட்ட காலத்தில் சென்ற கிணைமகன் வறுமை தீர இவன் கொடை வழங்கினான். [5]

மேற்கோள்

தொகு
  1. புறநானூறு 388
  2. வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி … … …
    பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ - என்னும் பகுதி இவன் வஞ்சினம் கூறிப் போரிட்டு வென்றதைக் குறிப்பிடுகிறது
  3. நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா
    மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்,
    பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
    அண்ணல் யானை வழுதி,
    கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே!
  4. வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
    பள்ளம், வாடிய பயன் இல் காலை,
    இரும் பறைக் கிணைமகன் சென்றவன்
  5. தன் நிலை அறியுநனாக, அந் நிலை,
    இடுக்கண் இரியல் போக, உடைய
    கொடுத்தோன் எந்தை, கொடைமேந்தோன்றல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னவன்_மறவன்&oldid=2991475" இலிருந்து மீள்விக்கப்பட்டது