தென்னாட்டுப் போர்க்களங்கள் என்பது கா. அப்பாத்துரை எழுதிய போர்க்களங்கள் (போர் நடந்த இடங்கள்) பற்றிக்கூறும் வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் சங்ககாலம் நடந்த போர்கள், வரலாற்று காலப்போர்கள் நடந்த போர்களும் கல்வெட்டுகளையும், சங்கத்தமிழ் பாடல்களையும் சான்று காட்டி எழுதப்பட்டுள்ளது.
தென்னாட்டுப் போர்க்களங்கள் |
---|
|
நூல் பெயர்: | தென்னாட்டுப் போர்க்களங்கள் |
---|
ஆசிரியர்(கள்): | கா. அப்பாத்துரை |
---|
வகை: | வரலாற்றாராய்ச்சி நூல் |
---|
மொழி: | தமிழ் |
---|
பக்கங்கள்: | 480 |
---|
பதிப்பகர்: | ஔவை நூலகம் |
---|
பதிப்பு: | 1961 |
---|
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
---|
- இதில் சங்கப்பாடல்களையும் சிலப்பதிகாரத்தையும் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அரண்மனையில் அமைக்கப்பட்ட பொறிகளையும், போர்கருவிகளையும் அதன் உபயோகங்களையும் பற்றி எழுதப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
- இதை படித்த முன்னால் தமிழக முதல்வர் அண்ணா பின்வருமாறு உரைத்தார்.
“
|
இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்
|
”
|
- பேரறிஞர் அண்ணா[1]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு
- ↑ பி. தயாளன் (ஆகத்து 2009). "பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்". தினமணி. (Web link). Retrieved on 22 சனவரி 2015.