தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம், சாத்தூர்
தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம், சாத்தூர் தமிழ்நாட்டின் சாத்தூர் நகரில் முதன்மை சாலையிலேயே அமைந்துள்ள ஓர் கிறித்தவ சீர்திருத்த தேவாலயமாகும். இது புனித பவுல் தேவாலயம் என அழைக்கப்படுகிறது. 1881ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் தேவாலயத்தின் முதல் பாதிரியாக சி.டி.ரெனியோசு இருந்தார். 1929 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்ட இந்த தேவாலயம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது.