தென்னைமரம் விளையாட்டு

தாய்மாரும் பெரியவர்களும் குழந்தைகளோடு விளையாடி மகிழும் விளையாட்டுகளில் ஒன்று தென்னைமரம் விளையாட்டு.

காலில் வைத்துத் தாலாட்டல்

தாய் கொஞ்சம் உயரமான இடத்தில் காலைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்காருவாள். குழந்தையைத் தன் இரண்டுகால் பரடுகளும் தாங்குமாறு உட்கார வைத்துக்கொண்டு மேலும் கீழும் தூக்கி ஆட்டி மகிழவைப்பாள். தாயின் கால் தென்னைமரம் எனக் கொள்ளப்படும்.

ஆட்டும்போது பாட்டுப் பாடுவாள்.

ஐயிலேலம்
ஐல கப்ப(ல்)

திரும்பத் திரும்பப் பாடி ஆட்டுவாள்.

தென்னை மரத்தில் ஏறாதே, தேங்காயைப் பறிக்காதே.
மா மரத்தில் ஏறாதே, மாங்காயைப் பறிக்காதே.

இப்படிப் பல்வேறு மரங்களின் பெயர்களைச் சொல்லி ஆட்டுவாள்.

கடைசியில் குழந்தையை

ஆற்றில் விழுகிறாயா, குளத்தில் விழுகிறாயா

எனக் கேட்பாள்.

குழந்தை எதைச் சொன்னாலும் குழந்தையை மெதுவாகத் தரையில் விழும்படி செய்வாள்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னைமரம்_விளையாட்டு&oldid=1009245" இலிருந்து மீள்விக்கப்பட்டது