தெமினா துரானி
தெமினா துரானி (Tehmina Durrani Urdu: تہمینہ درانی ; பிறப்பு 18 பிப்ரவரி 1953) ஒரு பாக்கித்தான் எழுத்தாளர், கலைஞர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த ஆர்வலர் ஆவார். இவரது முதல் புத்தகம், "மை ஃபியூடல் லார்ட்" (1991) பழமைவாத பாக்கித்தான் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது அரசியல் ரீதியாக பிரபலமான ஆனால் துன்புறுத்தல் செய்த கணவர் முஸ்தபா காரின் செயல்பாட்டினை மையமாகக் கொண்டது.
அப்துல் சத்தார் எதியுடன் இவளது மூன்று வருட சேவை காலம் இவரது வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியது. இது இவரது சுயசரிதையான "எ மிர்ரர் டூ த பிளைண்ட்" (1996) என்பதில் விவரிக்கப்பட்டுள்ளது. எதியின் செல்வாக்கு இவரை சமூகப் பணியில் ஊக்குவித்ததுடன், "மனிதாபிமானம்" மற்றும் பாக்கித்தானின் சமூக நல அரசாக தனது பங்களிப்பை மேலும் உயர்த்தும் நோக்கத்துடன், 'தெமினா துரானி அறக்கட்டளையினை' நிறுவ இவரை ஊக்குவித்தது.[1]
2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் அரசியல்வாதி ஷாபாஸ் ஷெரீப்பை மணந்தார்.
வாழ்க்கை
தொகுபாக்கித்தானின் கராச்சியில் பிறந்து வளர்ந்த தெமினா துரானி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாக்கித்தானின் முன்னாள் ஆளுனர் மற்றும் பாக்கித்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் நிர்வாக இயக்குநர் சாகூர் உல்லா துரானியின் மகள் ஆவார் . தெமினா துரானியின் தந்தைவழி தாத்தா சிற்றரையர் முஹம்மது ஜமான் துரானி ஆவார்.[2] தெமினாவின் தாயார், சமினா துரானி, முன்னாள் இளவரசர், பாட்டியாலாவின் பிரதமர் நவாப் சர் லியாகத் ஹயாத் கானின் மகள் ஆவார். சர் லியாகத் ஹியாத் கானின் சகோதரர், சர் சிக்கந்தர் ஹயாத் கான், 1947 க்கு முன் பஞ்சாப் பிரதமராக இருந்தார், ஒரு அரசியல்வாதி மற்றும் தலைவர் ஆவார்.
பதினேழு வயதில், இவர் அனீஸ் கான் என்பவரை மணந்தார், இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருந்தார். துரானியும், கானும் 1976 இல் திருமண முறிவுபெற்றனர். பின்னர் இவர், முன்னாள் முதல்வரும் பஞ்சாப்பின் ஆளுநருமான குலாம் முஸ்தபா காரை மணந்தார். முஸ்தபா கார், ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார். துரானி மற்றும் கார் ஆகியோருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. பல வருடங்களாக காரால் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு, இவர் தனது பதினான்கு ஆண்டுகள் [3] திருமண உறவில் இருந்து விடை பெற்றார்..
1991 இல், துரானி மை ஃபெடல் லார்ட்என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதினார்.[4] கார் போன்ற நிலப்பிரபுக்களின் உண்மையான சக்தி இஸ்லாத்தின் சிதைந்த பதிப்பிலிருந்து பெறப்பட்டது என்று இவர் புத்தகத்தில் வாதிட்டார், இது பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மவுனத்தால் இவரது கூற்று சரி என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[5]
இவரது தந்தைவழி மற்றும் தாய்வழி உறவுகளில் உள்ள இவரது குடும்பம் இவரையும் இவரது ஐந்து குழந்தைகளையும் பதின்மூன்று ஆண்டுகளாக நிராகரித்தது எனக் குறுப்பிட்டுள்ளார்.[6]
தனது இரண்டாவது கணவரான முகமது காரை விட்டுச் சென்ற சில வருடங்களில், அரசாங்க ஊழலுக்கு எதிராக இவர் உண்ணாவிரதம் இருந்தது ஒரு முக்கிய நிகழ்வாகும், மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 'பொறுப்புக்கூறல்' என்ற சொல் நடைமுறைக்கு வந்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பாக்கித்தானின் பிரதம அமைச்சர் மொயின் குரேசி இவரைப் பார்க்கச் சென்றபோதுதான் தனது உண்ணாவிரரத்ததினை முடித்துக் கொண்டார்.[7]
சான்றுகள்
தொகு- ↑ "Mission and Vision – TDF". www.tehminadurranifoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-10-16.
- ↑ "Happy Things in Sorrow Times – TDF". www.tehminadurranifoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-11-16.
- ↑ "Tehmina Durrani: If he can treat his own women this way, how will he treat the nation?". India Today (in ஆங்கிலம்). Retrieved 2018-10-16.
- ↑ BLOCH, HANNAH (20 August 2001). "The Evil That Men Do". Time. Archived from the original on 5 May 2007.
- ↑ "Tehmina Durrani". sawnet.org.
- ↑ "Founder TDF – TDF". www.tehminadurranifoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-10-16.
- ↑ "Tehmina Durrani". tehminadurrani.com. Archived from the original on 2018-10-19. Retrieved 2018-10-18.