தெமுலின்
தெமுலின் செங்கிஸ் கானின் சகோதரி ஆவார். இவர் அவரது தந்தை இறப்பதற்குச் சில காலம் முன் பிறந்தார். இவர் ஒலகோனுடு இனத்தைச் சேர்ந்த வீரர் பலசுகு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். செங்கிஸ் கான் தன் தாய் ஓவலுன், தன் மனைவி போர்தே மற்றும் தன் சகோதரர்களிடம் எவ்வாறு நெருக்கமாக இருந்தாரோ அவ்வாறே தன் தங்கையிடமும் நெருக்கமாக இருந்தார். மங்கோலியர்களின் கைகளில் படுதோல்வி அடைந்த பிறகு ஷா அலாவுதீனின் படைகள் போர்ப் பகுதிக்கு அருகில் மங்கோலியர்கள் தங்கியிருந்த இடங்களைத் தாக்கியபோது இவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஷா அலாவுதீனை அழிப்பேன் என்று செங்கிஸ் கான் சபதம் எடுத்தார். ஆனால் சில குறிப்புகள் அலாவுதீன் தாக்கியபோது செங்கிஸ் கானின் சாமன் கொகோசு அவரது நடத்தையைப் பற்றி செங்கிஸ் கானிடம் தெமுலின் தெரிவித்துவிடுவாறோ என்று பயந்து இவரைக் கொன்றதாகக் குறிப்பிடுகின்றன.