தெம்பாங், அருணாச்சல பிரதேசம்
தெம்பாங் (Thembang) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பழங்கால கிராமமாகும். [1]
வரலாறு
தொகுஇது கி.பி முதல் நூற்றாண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கிராமம் இப்பகுதியில் இது மிகவும் பழமையான கிராமமாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த கிராமம் யுச்சோ-பெமா-சென் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது தாமரை கிராமம் என்று பொருளாகும். இந்த கிராமம் 10 கி.மீ தூரத்தில் தற்போதைய இடத்திற்கு பின்னால் அமைந்துள்ள சட்-சி நதி பள்ளத்தாக்கில் அமைந்த்தாக நம்பப்படுகிறது. ஒரு தொற்றுநோய் காரணமாக, கிராமவாசிகளில் கிட்டத்தட்ட 90-ஒன்பது சதவீதம் பேர் இறந்து போயினர். பின்னர் எஞ்சிய கிராமவாசிகள் தற்போதுள்ள இடத்திற்கு அருகே சென்றுள்ளனர். கடல் மட்டத்தை விட 2300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
தெம்பாங்கில், பூட், கவ்னா, ராகுங் மற்றும் கோட்டம் கிராமவாசிகள் பாரம்பரிய கட்டிடக்கலைகளைப் பின்பற்றி ஒரு மகத்தான கோட்டை கட்டப்பட்டது. அவர்கள் அந்த காலத்தில் தெம்பாங்கின் பாபஸின் இறையாண்மையின் கீழ் இருந்தனர். வடக்கு மற்றும் தெற்கில் இரண்டு வாயில்கள் கட்டப்பட்டன. முந்தையவை நுழைவதற்குப் பயன்படுத்தப்பட்டன. பிந்தையவை வெளியேற பயன்படுத்தப்பட்டன. மாலையானதும், கோட்டை வாயில்களுக்குள் செல்லுமாறு மக்கள் உரத்த குரலில் கூச்சலிடபடுவார்கள். அதன் பிறகு அவை மூடப்பட்டன. இது மக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாலையும், இந்த வாயில்கள் அருகே உரத்த சத்தம் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு அவை மூடப்பட்டன. கோட்டையின் சுவரின் மேல் பெரிய கல் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை மேலே செல்ல முயற்சிக்கும் எந்தவொரு ஊடுருவும் நபரின் மீதும் விழும். இரவு நேரங்களில், இளம் வீரர்கள் வாள்கள், ஈட்டிகள், வில் மற்றும் அம்புகள் வைத்தி காவலிருந்தனர்.
தெம்பாங்கில் பல போர்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று பாபஸ் மற்றும் ருரங்கின் மிஜி பழங்குடியினருக்கு இடையிலான போர் முக்கியமானதாகும். சோங்டாங்பு இந்தப் போரை வழிநடத்தி வந்தார். அந்த போரின் போது, அனைத்து பாபஸும் வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர். பாபஸ் தோல்வியுடன் போர் முடிவடையும்போது விஷத்தில் நனைதத அம்பு அவரது மார்பகத்தைத் தாக்கியது.
இனங்கள்
தொகுபல சிறிய கிராமங்கள் தெம்பாங்கின் அதிகார எல்லைக்கு அருகிலுள்ள பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இவை கோந்துங், பாங்மா, செம்னக், செரோங், டாங்சென்மு, லாகம், சந்தர், மற்றும் லாச்சோங் என்பனவாகும். இந்த கிராமங்கள் தெம்பாங்கிலிருந்து குடிபெயர்ந்த மக்களால் அல்லது பிற பிராந்தியங்களிலிருந்து குடியேறியவர்களால் குடியேறப்பட்டுள்ளன.
மக்கள் தொகை
தொகுநகரமயமாக்கலின் தாக்கத்தை மிகக் குறைவாகவே தெம்பாங் கண்டிருக்கிறது. கோட்டையின் உள்ளே வசிக்கும் குலங்கள் இன்னும் பழங்குடி மோன்பா கட்டிடக்கலைகளைத் தொடர்ந்து கட்டப்பட்ட கல் வீடுகளில் வாழ்கின்றன. மத முக்கியத்துவம் வாய்ந்த பல குகைகள் மற்றும் கிராமத்தில் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான மணி மற்றும் சோர்டன் உள்ளன. கிராமத்தின் மலை உச்சியில் புதுப்பிக்கப்பட்ட கோன்பா (புத்த கோயில்) உள்ளது. அங்கு பாரம்பரிய மர வேலைப்பாடுகள், கையெழுத்துப் பிரதிகள் கவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. பூட்டானியர்கள், திபெத்தியர்கள் மற்றும் பூர்வீக வடகிழக்கு இந்திய கலாச்சாரம் போன்ற பல்வேறு கலாச்சாரங்களின் சிறிய தாக்கங்களைக் கொண்ட கிராமவாசிகள் தங்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்னும் கடைப்பிடிக்கின்றனர். அதில் அவர்களின் சமூக அமைப்பு மற்றும் நடைமுறைகள், சடங்குகள், சடங்குகள் மற்றும் அவற்றின் வடமொழி கட்டிட அறிவு முறைகள் ஆகியவை அடங்கும். கிராமவாசிகள் தங்கள் பாரம்பரிய விவசாயத்தை மாட்டு சாணம், செம்மறி ஆட்டின் சாணம், அவைகளின் சிறுநீர் மற்றும் ஓக் இலைகள் போன்ற பல அடிப்படை விஷயங்களைப் பயன்படுத்தி தழைக்கூளம் தயாரித்து அதை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். விவசாய நோக்கங்களுக்காகவும், பல்வேறு பால் பொருட்கள் மூலம் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் விலங்குகளை வளர்க்கிறார்கள். தெம்பாங்கின் முக்கியமான பண்டிகைகளில் சில லோசர், ஹோஷினா, சோய்கோர் போன்றவையாகும்.
தெம்பாங் அதன் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் முதல் 7000 மீட்டர் உயரத்தில் உள்ளது. வன வகை மிதமான முதல் ஆல்பைன் புல்வெளிகள் வரை அரிய மல்லிகை, ரோடோடென்ட்ரான், ப்ரிமுலா மற்றும் மிகவும் அரிதான மருத்துவ தாவரங்களை இங்கு காணலாம். சிறுத்தை, சிவப்பு பாண்டா, இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை, சீன பாங்கோலின், கருப்பு பிகா, நீல செம்மறி போன்ற அரிய வகை விலங்குகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த வளங்கள் அனைத்தையும் கொண்ட சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் சுற்றுலா ஒரு நிலையான வழியில் தெம்பாங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலா விருதை அருணாச்சல பிரதேச அரசின் சுற்றுலாத் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
தெம்பாங் ட்சாங் அதன் விசித்திரமான புவியியல் இருப்பிடம், மாறுபட்ட கலாச்சார தாக்கங்கள், பணக்கார வரலாறு மற்றும் வேறு எந்த இடத்தையும் போலல்லாமல் தனித்துவமான அம்சங்களுடன் தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்காக போட்டியிடுகிறது.
குறிப்புகள்
தொகு- "Into the Untravelled Himalaya".
- Ananda Banerjee. "The Monpas Of Thembang". www.livemint.com.
- UNESCO World Heritage Centre. "Thembang Fortified Village".
- "Arunachal Tourism". Archived from the original on 2020-01-21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- "Arunachal nominees to work together for Unesco heritage tag". The Times of India.
- "About Thembang - ecotourismap". Archived from the original on 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- "About Thembang".
- "Outlook Traveller".
- "Society and Economy in North-East India".
- "Thembang".
- "Villages & Towns in Thembang Circle of West Kameng, Arunachal Pradesh".
- "Echo Of Arunachal". Archived from the original on 2016-10-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- [1]
- "Thembang H Q Village in Thembang (West Kameng) Arunachal Pradesh - villageinfo.in".
- "Thembang Trek".
- "NE sites on Unesco list". The Telegraph.
- "Thembang Fortified Village - India". UNESCO World Heritage. Archived from the original on 2016-05-08. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- "Thembang Heritage - Academia.edu".
- "Thembang".
- "Thembang Circle Villages, West Kameng, Arunachal Pradesh @VList.in".
- "Thembang History, News, Infrastructure, Members, Photos - Rootvinn". Archived from the original on 2016-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- "A Trekking Expedition in Pristine Arunachal". Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- "Report on the Administration of North East India".
- "Society and Economy in North-East India".
- "Full text of "Is Japan a menace to Asia?"".
- "ICIMOD: SERVIR project's success in combating forest fires".
- ↑ https://www.cbd.int/cepa/cepafair/2012/cepa-fair-2012-fes-11-wwf.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- ↑ http://www.scienceandsociety-dst.org/TSP%20Scheme%202013-14.pdf
- ↑ http://ceoarunachal.nic.in/PollingStationDetails/4.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.