தெரசா இலாகோ

தெரசா இலாகோ (Teresa Lago) (பிறப்பு: 1947) போர்த்துகீசிய வானியலாளர் ஆவார். போர்த்தோ பல்கலைக்கழகத்தில் இவர் வானியற்பியல் மையத்தை நிறுவினார். இவர் போர்த்துகல் நகரில் முதல் வானியல் இளவல் பட்டத்தையும் தொடங்கினார்l. இவர் இப்போது பன்னாட்டு வானியல் ஒன்றியப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.[1] இவரது ஆய்வு இளம் விண்மீன்களின் படிமலர்ச்சியிலும் மக்களிடம் வானியல், அறிவியல் பண்பாட்டை வென்றெடுப்பதிலும் கவனத்தைக் குவிக்கிறது.

தெரசா இலாகோ
Teresa Lago
இயற்பெயர்தெரசா இலாகோ
பிறப்புமரியா தெரசா வாழ்சு தொறாவோ இலாகோ
1947
இலிசுபோவா
தேசியம்போர்த்துகீசியர்
துறைவானியற்பியல், வானியல்
பணியிடங்கள்போர்த்தோ பல்கலைக்கழகம்]], பன்னாட்டு வானியல் ஒன்றியம்

வாழ்க்கைப்பணி

தொகு

மரியா தெரசா வாழ்சு தொறாவோ இலாகோ போர்த்தோ பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டமும் 1979 இல் சுசெக்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வான , டி டவுரி விண்மீன்களின் நோக்கீட்டு, கோட்பாட்டியல் ஆய்வு இலியோன் மாசுதெல்லின் வழிகாட்டலின் கீழ் செய்யப்பட்ட்து.[2] இவர் 1983 இல் போத்துகல், போர்த்தோ பல்கலைக்கழகத்தில் முதல் வானியல் பட்டப் படிப்பைத் தொடங்க வைத்தார். இங்கே இவர் பேராசிரியராகத் தொடர்கிறார். இவர் 1988 இல் அப்பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் மையத்தை உருவாக்கி அதில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.[3] இவர் போர்த்துகல் நாடு ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தோடு ஒருங்கிணைந்து செயல்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பெரிதும் பாடுபட்டுள்ளார்.[4]

ஐரோப்பிய விண்வெளி முகமையின்விண்வெளி அறிவியல் அறிவுரைக்குழு, டபுளின் உயராய்வு நிறுவன அண்ட இயற்பியல் பள்ளி வாரியம் உள்ளடங்கிய பல அயல்நாட்டு ஆராய்ச்சி, அறிவுரை அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.[5] இவர் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார்.[6]இவர் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்ற பாலினச் சமமைக் குழுவின் தலைவராகவும் விளங்கியுள்ளார்.[7]

இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியச் செயற்குழு உதவிப் பொதுச் செயலாளர்,, சிறப்பு ஆளெடுப்புக் குழு அறிவுரைஞர் போன்ற பதவிவிகளில் இருந்துள்ளார்.[8] இவர் 2018 இல் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக விளங்கினார்.[9]

இவர் பிரித்தானியாவின் அரசு வானியல் கழகத்திலும் ஐரோப்பியா கல்விக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.[5]

தகைமைகளும் விருதுகளும்

தொகு

அமெரிக்க வானியல் கழகம் 1985 இல் இவருக்கு என்றி கிரேழ்சியன் நிதிநல்கையை வழங்கியது.[10] அறிவியல் பண்பாட்டை வளர்த்தெடுத்தமைக்காக இவருக்கு சியேன்சியா விவா மாந்தெப்பியோ விருது 2018 இல் தரப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Astronomer Teresa Lago is the winner of the 2018 Ciência Viva Montepio Grand Prize". International Astronomical Union. 12 November 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  2. "(Maria) Teresa Lago". The Mathematics Genealogy Project. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  3. "Staff: Maria Teresa V. T. Lago". Centro de Astrofísica da Universidade do Porto. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  4. "Teresa Lago amongst friends". Instituto de Astrofísica e Ciências do Espaço. 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  5. 5.0 5.1 "Biographies of Members of the Scientific Council". Commission Européenne. 18 July 2005. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  6. "Dedicated to excellence: the ERC's Scientific Council". European Commission. 2007. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  7. "GS1 Speakers: Prof Teresa Lago (GS1Eu)". Gender Summit Europe 2011.
  8. "Maria Teresa V. T. Lago". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  9. "IAU XXX General Assembly Draws to a Close". International Astronomical Union. 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  10. "Chrétien International Research Grants". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரசா_இலாகோ&oldid=3951390" இலிருந்து மீள்விக்கப்பட்டது