தெற்கு ஆளுநரகம்
பகுரைனின் மாகாணம்
தெற்கு கவர்னரேட் (Southern Governorate, அரபு மொழி: المحافظة الجنوبية, romanized: Al-Muḥāfaẓat al-Janūbīyah ) என்பது பகுரைனின் நான்கு ஆளுநரகங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும், மக்கள் தொகையில் (91,450) மிகச்சிறிய மாகாணமும் ஆகும்.[2] இதில் பகுரைனின் பழைய நகராட்சிகளின் பகுதிகளான - அல் மிந்தாக்கா அல் கர்பியா, அர் ரிஃபா வா அல் மிந்தாக்கா அல் ஜானுபியா, ஜுசூர் ஹவார் (ஹவார் தீவுகள்) ஆகியவை அடங்கும். இது பஹ்ரைனின் பிராந்தியங்களில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டது.
தெற்கு கவர்னரேட்
المحافظة الجنوبية | |
---|---|
பகுரைனில் தெற்கு கவர்னரேட்டின் அமைவிடம் | |
நாடு | பகுரைன் |
அரசு | |
• ஆளுநர் | அலி அல்-கலீஃபா இடையே கலீஃப் |
மக்கள்தொகை (2010[1]) | |
• மொத்தம் | 1,01,456 |
நேர வலயம் | ஒசநே+3 (Arabia Standard Time) |
இணையதளம் | www.southern.gov.bh |
தெற்கு ஆளுநரகத்தின் ஆளுநரான ஷேக் கலீஃபா பின் அலி அல்-கலீஃபா (பி. 1993) ஆவார். இவர் பிரதமர் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவின் பேரனும், துணை பிரதம மந்திரி ஷேக் அலி பின் கலீஃபா அல் கலீஃபாவின் மகனும் ஆவார்.
ஆளுநரத்துக்கு உட்பட்ட பகுதிகள்
தொகு- அவாலி : தெற்கு ஆளுநரகத்தின் பெட்ரோலிய நகராட்சி
- ஈசா டவுன் : முன்னர் மத்திய ஆளுநரகத்தின் ஒரு பகுதி, இப்போது தெற்கு ஆளுநரகத்தின் ஒரு பகுதி
- ஸல்லாக்
- ஹவார் தீவுகள்
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
- ↑ "2008 Estimated Population of Bahrain - Central Informatics Organisation" (PDF). Archived from the original (PDF) on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.