தெலங்காணா மாநில மகளிர் ஆணையம்

தெலங்காணா மாநில மகளிர் ஆணையம் (Telangana State Women Commission) என்பது தெலங்காணா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1993ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். தெலங்காணா அரசால் அம்மாநிலத்தில் பெண்கள் நல ஆணையம் நீதித்துறை சார்பு அமைப்பாக அமைக்கப்பட்டது.

தெலங்காணா மாநில மகளிர் ஆணையம்
ஆணையம் மேலோட்டம்
அமைப்பு15 அக்டோபர் 2004
ஆட்சி எல்லைதெலங்காணா அரசு
தலைமையகம்தெலங்காணா மாநில மகளிர் ஆணையம், 2வது தளம், தென்பகுதி, புத்தா பவனம், செகந்திராபாத்-500003.[1][2]
ஆணையம் தலைமை
  • வாகிதி சுனிதா இலட்சுமண ரெட்டி, தலைவி
வலைத்தளம்Official Website அதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாறும் குறிக்கோள்களும் தொகு

தெலங்காணா மாநில மகளிர் ஆணையம், பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும், மாநிலத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்யவும் உருவாக்கப்பட்டது. [3] குடும்பம் மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் ஆணையம் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

தெலங்காணா மாநில மகளிர் ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது:

  • பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தல்.
  • சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறினால் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு எந்த உரிமையையும் பறிக்கும் பட்சத்தில் சரியான நேரத்தில் தலையிடுவதன் மூலம் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாளுதல்.
  • பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுக்குப் பரிந்துரைத்தல்.
  • மாநிலத்தில் பெண்கள் அடிப்படையிலான சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

தெலங்காணா மாநில மகளிர் ஆணையம் 181 என்ற எண்ணை மாநிலத்தின் மகளிர் உதவி எண்ணாக செயல்படுத்தியது மற்றும் சுய உதவிக்குழுக்கள் முயற்சியைத் தொடங்கியது [4]

அமைப்பு தொகு

தெலங்காணா மாநில மகளிர் ஆணையம் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது. அவர்களின் சம்பளம் மற்றும் இதர ஊதியங்கள் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்பட்டு வருகின்றன.

தெலங்காணா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வகிதி சுனிதா லட்சுமா ரெட்டி உள்ளார். இவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியிலிருப்பார்.

செயல்பாடுகள் தொகு

2006-இல் தெலங்காணா மாநில மகளிர் ஆணையம் கீழ்கண்ட செயல்பாடுகளைச் கீழ்கண்ட செயல்பாடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டது:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதை ஆணையம் உறுதி செய்தல்[5]
  • மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்
  • மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.
  • பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல்[6]
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்களைக் கொண்ட பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகலாம்.
  • மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி.
  • பெண்களின் வெகுஜனக் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் இது தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்குச் செய்தல்.
  • பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள எந்த வளாகம், சிறை அல்லது இதர தங்குமிடங்கள் அல்லது வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருதல்.
  • ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரிக்கவும், ஆய்வு செய்யவும் மற்றும் விசாரிக்கவும்.
  • கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஏதேனும் ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் மகளிரின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறிதல்.
  • பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது அவர்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் புகார்களை விசாரித்தல்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Telangana State Women Commission". Telangana State Women Commission. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
  2. "Telangana State Women Commission". Telangana State Women Commission. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
  3. Rajagopalan, Swarna (30 May 2016). "Why National and State Women’s Commissions are important and should be held accountable". dnaindia.com. https://www.dnaindia.com/india/report-why-national-and-state-women-s-commissions-are-important-and-should-be-held-accountable-2217939. 
  4. "Telangana State Women's Commission starts operations, members take charge". Deccan Chronicle. 9 January 2021. https://www.deccanchronicle.com/nation/politics/080121/telangana-state-womens-commission-starts-operations-members-take-cha.html. 
  5. "Telangana police according top priority to women safety: TSCW chief". telanganatoday.com. 3 July 2021. https://telanganatoday.com/telangana-police-according-top-priority-to-women-safety-tscw-chief. 
  6. "Bulli Bai victims from Hyderabad move Telangana women’s panel for justice". New Indian Express. 5 January 2022. https://www.newindianexpress.com/states/telangana/2022/jan/05/bulli-bai-victims-from-hyderabad-move-ts-womens-panel-for-justice-2403173.html. 

வெளி இணைப்புகள் தொகு