தெலங்கானா நாள்

தெலங்கானா மாநிலம் உருவான நாள்

தெலங்காணா நாள் (Telangana Day) எனப் பொதுவாக அறியப்படும் இந்நாள் தெலங்காணா மாநிலம் உருவானதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.[1] இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக 2014 சூன் 2 அன்று முதல் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தெலங்காணா மாநிலம் செயல்படத்தொடங்கியது. இந்த நாள் இந்திய மாநிலமான தெலுங்காணாவில் ஒரு மாநில பொது விடுமுறை நாளாகும். 2014-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சூன் மாதம் [2]2-ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. தெலங்காணா நாளில் பொதுவாக அணிவகுப்புகள் மற்றும் அரசியல் பேச்சுக்கள் மற்றும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தெலங்காணாவின் வரலாறு மற்றும் மரபுகளைக் கொண்டாடும் பல்வேறு பொது மற்றும் தனியார் நிகழ்வுகளும் மாநிலம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் முறையான நிகழ்வுகளுடன் விழா கொண்டாடப்படுகிறது. [3] [4] தெலங்காணா முதல்வர் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் நிகழ்வும் அணிவகுப்பும் மைதானத்தில் நடைபெறுகிறது. மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் இக்கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தெலங்காணா நாள்
Telangana Day
அதிகாரப்பூர்வ பெயர்தெலங்காணா உருவான நாள்
பிற பெயர்(கள்)தெலங்காணா நாள்
கடைபிடிப்போர்தெலங்காணா
வகைமாநில விடுமுறை
முக்கியத்துவம்2014-ஆம் ஆண்டு தெலங்காணா உருவானது
தொடக்கம்2 சூன்
முடிவு3 சூன்
நாள்2 சூன்
நிகழ்வுஆண்டுக்கொரு முறை

வரலாறு

தொகு

தெலங்காணா மாநிலம் அதிகாரப்பூர்வமாக 2 சூன் 2014 அன்று உருவாக்கப்பட்டது. தெலங்காணா ராசுட்டிர சமிதி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலங்கானாவின் முதல் முதலமைச்சராக கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

1 சூலை 2013 அன்று, காங்கிரசு செயற்குழு ஒருமனதாக தனி தெலங்காணா மாநிலம் அமைக்க பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2014-இல் இந்திய நாடாளுமன்றத்தில் [6] இம்மசோதா வைக்கப்பட்டது. பிப்ரவரி 2014-இல், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மசோதா, வடமேற்கு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய தெலங்காணா மாநிலம் அமைப்பதற்கான இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. [7] இந்த மசோதா சனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று 1 மார்ச் 2014 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. [8] [9]

முக்கியத்துவம்

தொகு

பல ஆண்டுகளாக நீடித்த தெலங்காணா இயக்கத்திற்கான மாநில வரலாற்றில் இந்த நாள் முக்கியத்துவமான நாளாகக் குறிக்கப்பட்டது.

பண்பாட்டு நிகழ்வுகள்

தொகு

நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு அரசு நிதியுதவி செய்கிறது. பல்வேறு துறைகளில் முன்மாதிரியான பங்களிப்பிற்கான தெலங்காணா மாநில விருதுகள் வெவ்வேறு நிகழ்வுகளில் வழங்கப்படுகின்றன. விடுதிகளில் தெலங்காணா உணவுத் திருவிழாவும், இரவீந்திர பாரதி அரங்கத்தில் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பதுகம்மா பண்டிகை அல்லது மலர் திருவிழா அக்டோபர் அல்லது செப்டம்பரில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தெலங்காணா உருவான நாள்:பிரதமர் மோடி வாழ்த்து". தினமணி. https://www.dinamani.com/india/2022/jun/02/pm-modi-greets-people-of-telangana-on-its-formation-day-3855040.html. பார்த்த நாள்: 2 June 2022. 
  2. "Telangana to celebrate state formation day tomorrow". 1 June 2018. https://www.deccanherald.com/national/telangana-celebrate-state-formation-day-tomorrow-672840.html. பார்த்த நாள்: 20 December 2018. 
  3. "Telangana Formation Day Award for TITA". Thehindu.com. 4 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  4. "Government departments, institutions observe Telangana Formation Day". Thehindu.com. 3 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  5. Amarnath K Menon (1 June 2014). "Telangana is born, KCR to take oath as its first CM". The India Today Group (Hyderabad) இம் மூலத்தில் இருந்து 11 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141111151025/http://indiatoday.intoday.in/story/telangana-braces-to-celebrate-its-birthday-celebrations-kcr/1/364724.html. பார்த்த நாள்: 14 July 2014. 
  6. "Telangana bill passed in Lok Sabha; Congress, BJP come together in favour of new state". Hindustan Times. Archived from the original on 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  7. "Telangana bill passed by upper house". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
  8. "The Andhra Pradesh reorganisation act, 2014" (PDF). Ministry of law and justice, government of India. Archived from the original (PDF) on 8 January 2016. பார்க்கப்பட்ட நாள் 3 March 2014.
  9. "Telangana Formation Day". https://www.thehansindia.com/tags/Telangana-Formation-Day. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலங்கானா_நாள்&oldid=3823005" இலிருந்து மீள்விக்கப்பட்டது