தெலிசிலா
தெலிசிலா (Telesilla) (கிமு 510) என்பவர் ஆர்கோசைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் பண்டைய கிரேக்க கவிஞர் ஆவார். இவர் ஒரு புகழ்பெற்ற பெண்மணியாவார். குறிப்பாக இவரது கவிதைகளுக்காகவும், அரசியல் மற்றும் இராணுவ நெருக்கடி மற்றும் பின்னர் மீண்டும் கட்டியெழுப்புதல் மூலம் ஆர்கோசின் தலைமைக்காகவும் புகழ்பெற்றவராவார். [1] பண்டைய கிரேக்க தெசலோனிகாவின் ஆன்டிபேட்டர் இவரை ஒன்பது பெண் கவிஞர்களின் வரிசையில் சேர்த்துக் கொண்டார். [2]
கவிதைகள்
தொகுதெலிசிலாவின் கவிதைகளில் சில வரிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன, அவை பிற்கால எழுத்தாளர்களின் மேற்கோள்களில் பாதுகாக்கப்படுகின்றன. [3] பல்வேறு கிரேக்க எழுத்தாளர்கள் தெலிசிலாவிலிருந்து வேறு பல ஒற்றை சொல்லைப் மேற்கோள்களைப் பாதுகாத்துள்ளனர், அவற்றில் பல் சொல்கள் ஏதோ ஒருமுறை மட்டுமே சொல்லாப்பட்டவையாகும். அவை ஒரு தனித்துவமான வார்த்தையை அல்லது நவீன அறிஞர்களுக்கு தெரியாத ஒரு வார்த்தையின் தனித்துவமான பயன்பாட்டைக் காக்கின்றன. பண்டைய கிரேக்கத்தைப் பற்றிய நவீன புரிதலை மேம்படுத்த இது உதவுகிறது. குறிப்பாக தெலிசிலா எழுதிய ஆர்கோலிக் டோரிக் கிரேக்க பேச்சு வழக்காகும் .
கெபசுதேசனின் ஒரு வரி இலக்கணமாக இது பாதுகாக்கப்படுகிறது. வெளிப்படையாக கன்னிப்பெண்களின் பிரார்த்தனை நோக்கத்திற்கான பாடலாக இது உள்ளது.
ஆர்கோசின் பாதுகாப்பு
தொகுகிமு 510 இல் எசுபார்டாவின் மன்னரான கிளியோமினசு ஆர்கிவ்சு நிலத்தின் மீது படையெடுத்தபோது, செபியா போரில் ஆர்கோசின் அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து அவரைக் கொன்றார். மேலும் தப்பியவர்களை படுகொலை செய்தார். கிளியோமினசு தனது படைகளுடன் ஆர்கோசின் நகருக்குச் சென்றபோது, அதைப் பாதுகாக்க எந்த வீரர்களும் இல்லை.
பௌசானியாசின் கூற்றுப்படி, தெலிசிலாவின் அனைத்து அடிமைகள் மற்றும் அனைத்து ஆண்களும் பொதுவாக இளைஞர்கள் அல்லது முதியவர்கள் இராணுவ சேவையிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். எனவே தெலிசிலா ஆயுதங்களை சேகரித்து, பெண்களை ஆயுதபாணியாக்கி, போர்க்களத்தில் நிறுத்தினார். [4] எசுபார்டன்கள் போர்களத்தில் தெலிசிலாவையும், மற்ற பெண்களையும் பயமுறுத்துவதற்காக ஒரு போர்க்குரலை எழுப்பினர். ஆனால் தெலிசிலாவின் இராணுவம் பயப்படவில்லை. அவர்கள் போர்களத்தின் நின்று வீரத்தைக் காட்டினர். [5] தோல்வி ஒரு வெட்கக்கேடான பேரழிவைக் குறிக்கும் என்பதாலும், அதே வேளையில், பெண்களை அழிப்பது ஒரு அபாயகரமான வெற்றியாக இருக்கும் என்பதை உணர்ந்த இலாசெதமோனியர்கள், நகரத்தை விட்டு வெளியேறினர். [6]
தெலிசிலாவின் இராணுவம் கிளியோமினசையும், மன்னர் தமரட்டசையும் விரட்டியடித்து, நகரத்தை காப்பாற்றியது என்று 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாசிதோனிய எழுத்தாளர் பாலியானசு என்பவர் எழுதுகிறார். [7]
மற்றவை
தொகுபண்டைய கிரேக்க அரிஞர் இலூசியன் தனது படைப்பில் அமோரசைப் பற்றி குறிப்பிடுகையில், எசுபார்டான்களுக்கு எதிரான தெலிசிலாவின் வெற்றிக்குப் பின்னர், ஏரெசு என்ற கடவுள் (போரின் கடவுள்) ஆர்கோசில் பெண்களின் கடவுளாக மாறினார். [8]
எபிதாரசில் உள்ள கோரிபம் மலையின் உச்சியில் இருக்கும் ஆர்த்தெமிசின் சரணாலயத்தில் தெலிசிலாவை குறிப்பிடுகிறார் என்றும் பௌசானியாசு குறிப்பிடுகிறார். அழிக்கப்பட்ட ஆர்கிவ் நகரமான அசைனுக்கும் எபிடார்சின் பிரதேசத்திற்கும் இடையிலான பழைய எல்லை மலையின் நடுப்பகுதியில் ஒரு வலர்ந்த ஆலிவ் மரமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். [9]
2 ஆம் நூற்றாண்டின் இறையியலாளரும், ஒரு அசிரிய கிறிஸ்தவ எழுத்தாளருமான தேத்தியனின் கூற்றுப்படி, நைசெரட்டசின் படைப்பான தெலிசிலாவின் ஒரு சிலை ரோமானிய குடியரசுக் காலத்தின் பிற்பகுதியில் பம்பே என்பவரால் கட்டப்பட்ட பண்டைய உரோமில் ஒரு கட்டமைப்பான பாம்பே என்ற அரங்கினுள் நிறுவப்பட்டது. கிமு 55 இல் கட்டி முடிக்கப்பட்ட பம்பே என்பது உரோமில் கட்டப்பட்ட முதல் நிரந்தர நாடக அரங்காமாகும். [10]
குறிப்புகள்
தொகு- ↑ Pausanias: Description of Greece, ARGOLIS- 2.20.8"
- ↑ Fernandez Robbio, Matías S. (2014) «Musas y escritoras: el primer canon de la literatura femenina de la Grecia antigua (AP IX 26)». Praesentia, v. 15, 2014, pp. 1-9. ISSN (en línea): 1316-1857. (online)
- ↑ Note: variant readings are noted with the surname of the editor and abbreviations referring to the type of work cited. Latin phrases and abbreviations are used to convey information about how many times a variant reading appears or the scholar's reasoning for interpreting the reading a certain way — bis, "twice," nisi, "if not", ci., "conjecture", vel, "or," rell., "rest of manuscripts." Maximilian Consbruch wrote an enchiridion or handbook to Hephaestion (abbreviated ench.); cod. refers to the various codices, or copies of books, from which the consensus text and the reported variants are derived. For the Greek text, angled quotation marks are used for first level quotes from each author, with dashes setting off the direct quote from Telesilla; in English, double quotes and single quotes are used for the same purpose. The texts, translations and notes are reprinted courtesy of the Loeb Classical library, links and quotation marks have been added by a Wikipedia editor.
- ↑ Pausanias: Description of Greece, ARGOLIS- 2.20.9 "But Telesilla mounted on the wall all the slaves and such as were incapable of bearing arms through youth or old age, and she herself, collecting the arms in the sanctuaries and those that were left in the houses, armed the women of vigorous age, and then posted them where she knew the enemy would attack."
- ↑ Pausanias: Description of Greece, ARGOLIS- 2.20.9 "When the Lacedaemonians came on, the women were not dismayed at their battle-cry, but stood their ground and fought valiantly."
- ↑ Pausanias: Description of Greece, ARGOLIS- 2.20.9 "Then the Lacedaemonians, realizing that to destroy the women would be an invidious success while defeat would mean a shameful disaster, gave way before the women."
- ↑ "Polyaenus, Strategems, 8.68.1". Archived from the original on 2019-09-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
- ↑ http://www.well.com/user/aquarius/lucian-amores.htm Telesilla, who armed herself against the Spartiates, and because of whom Ares is numbered at Argos among the gods of the women,...
- ↑ Pausanias: Description of Greece, ARGOLIS- 2.28.2 "On the Top of the mountain there is a sanctuary of Artemis Coryphaea (of the Peak), of which Telesilla mention in an ode."
- ↑ One Hundred Greek Sculptors, Their Careers and Extant Works 2.5, citing Tatian, Oratio ad Graecos 33
மேலும் படிக்க
தொகு- David Campbell, Greek Lyric IV (Loeb Classical Library, 1992), pp. 70–83.
- Reginald Walter Macan, Herodotus iv.–vi., i. 336 foll. and notes.
- Pausanias ii. 20, 8
- Plutarch, De Virtut. Mulierum, 8
- Clement of Alexandria, Stromata, iv. 19, p. 522
- Theodor Bergk, Poetae Lyrici Graeci, iii.
வெளி இணைப்புகள்
தொகு- Project Continua: Biography of Telesilla Project Continua is a web-based multimedia resource dedicated to the creation and preservation of women's intellectual history from the earliest surviving evidence into the 21st Century.