தெலூரியம் அயோடைடு
தெலூரியம் அயோடைடு (Tellurium iodide) என்பது TeI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு வடிவங்களில் இச்சேர்மம் அறியப்படுகிறது. இவற்றிம் அமைப்பு தெலூரியத்தின் மற்ற ஒராலைடுகளிடமிருந்து வேறுபடுகின்றன. தெலூரியத்தின் மூன்று துணை ஆக்சைடுகள் α-TeI, β-TeI, மற்றும் Te2I, தவிர மேலுமொரு தெலூரியம் நான்காக்சைடு ஆகியன அறியப்படுகின்றன[1].
இனங்காட்டிகள் | |
---|---|
12600-42-9 | |
பண்புகள் | |
TeI | |
தோற்றம் | சாம்பல்நிறத் திண்மம் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இருதெலூரியம் புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | செலினியம் ஓருகுளோரைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | தெலுரியம் நான்கயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் பண்புகள்
தொகுதெலூரியம் உலோகம், அயோடின் மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைச் சேர்த்து நீர்வெப்ப வினையினால் இச்சாம்பல் நிற தெலூரியம் அயோடைடைத் தயாரிக்கலாம். வினை 270 ° செல்சியசு வெப்பநிலையில் முச்சரிவு அமைப்புள்ள α-TeI வகை உருவாகிறது. இதே கலவை 150 ° செல்சியசு வெப்பநிலையில் ஒற்றைச்சரிவு சிற்றுறுதி நிலை β-Te வடிவமும் தோன்றுகிறது[2] . இச்சேர்மங்கள் அமைப்பு ரீதியாக Te2I இன் அமைப்பை ஒத்துள்ளன ஆனால், கூடுதலான அயோடைடு தொகுதிகள் மற்ற தெலூரியம் மையங்களுடன் பாலமாக இணையவில்லை.
தொடர்புடைய ஒற்றைக்குளோரைடு மற்றும் ஒற்றை புரோமைடுகள் Te2X2 என்ற பொது வாய்ப்பாட்டுடன் காணப்படுகின்றன[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Zhengtao Xu "Recent Developments in Binary Halogen–Chalcogen Compounds, Polyanions and Polycations" in Handbook of Chalcogen Chemistry: New Perspectives in Sulfur, Selenium and Tellurium, Francesco Devillanova, Editor, 2006, RSC. pp. 381-416. Royal Society எஆசு:10.1039/9781847557575-00455
- ↑ R. Kniep, D. Mootz, A. Rabenau "Zur Kenntnis der Subhalogenide des Tellurs" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1976, Volume 422, pages 17–38. எஆசு:10.1002/zaac.19764220103