தெல்லு எறிதல்
தெல்லு எறிதல் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள தெல்லுக்காய்களை வேறொரு தெல்லுக்காயால் உத்திக் கோட்டிலிருந்து அடித்து வெளியேற்றி ஈட்டிக்கொள்வது. அதிகம் ஈட்டியவர் வெற்றி.
சுவர் ஓரமாக ஓரடி நீளமும் அரையடி அகலமும் உள்ள கோடுகளால் அரங்கு அமைக்கப்படும். முதலில் ஒருவர் எத்தனைக் காய்களை அரங்கில் வைக்கிறாரோ அதே எண்ணிக்கையில் மற்றவர்களும் தெல்லுக்காய்களை அரங்கில் வைத்து ஒவ்வொருவராகத் தன் கையிலுள்ள மற்றொரு காயால் அடித்து வெளியேற்றி எடுத்துக்கொள்வர். எறிந்த காய் அரங்கிற்குள் நின்றுவிட்டால் ஒருமுறை தன் வேறொரு காயால் அடித்து(உசுப்பி) வெளியேற்றி எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980