தெளிதமிழ் (இதழ்)
தெளிதமிழ் திங்களிதழ் உருவான வரலாறு
நீண்ட நாட்களாக நல்ல தமிழில் இதழ் நடத்த வேண்டும் என்று எண்னியிருந்த எண்ணத்தின் வெளிப்பாடு தெளிதமிழ் திங்களிதழ் வெளி வருவதற்குக் காரணமாயிற்று முனைவர் இரா.திருமுருகனார் அவர்களால் அமைக்கப்பட்ட புதுவை தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளை சார்பில் முதல் இதழாக "நல்லதமிழ்" எனும் பெயரில் 11.04.1993 இல் புதுவை பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது கையெழுத்து ஏடாக அறிமுகபடுத்தப்பட்டு சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 14.04.1993 அன்று மறைமலையடிகள் சாலையில் உள்ள முனைவர் இரா.திருமுருகனார் இல்லத்தில் வெளியிடப்பட்டது அதன் விலை(நன்கொடை) உரூ.1/- .
'நல்லதமிழ்' திங்களிதழின் சிறப்பாசிரியராக முனைவர் இரா.திருமுருகனார் அவர்களும், ஆசிரியராகப் புலவர் மு.இறைவிழியனார் (மு.சாமிக்கண்ணு)அவர்களும் பொறுப்பேற்று இதழ் நடத்தி வந்தனர். 'நல்லதமிழ்' இதழ்ப் பெயரை பதிவு செய்யவில்லை இரண்டு பெயர்கள் எழுதி கொடுத்தால் அதில் ஒரு பெயரைத் தேர்வு செய்து இசைவளிக்கலாம் என்று கூறியதால் 'தெளிதமிழ்' எனும் பெயரை நல்லதமிழ் பெயருடன் சேர்த்துக் கொடுத்தப் பின்னர் "தெளிதமிழ்" என்னும் பெயரை இதழுக்கு வைத்துக் கொள்ள அரசு இசைவளித்தது.இதனால் நல்லதமிழ் இதழ் 14.11.1994 ஆம் நாள் முதல் 'தெளிதமிழ்' இதழ் எனும் பெயருடன் வெளிவந்தது.அப்பொழுது அதன் விலை உரூ.1.50/-.
சிறப்பாசிரியர் முனைவர் இரா.திருமுருகனார்,ஆசிரியர் புலவர் மு.இறைவிழியனார் ஆகிய இருவருக்குப் பிறகு பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள்,புலவர் நா.கிருட்டினசாமி ஆகியோர் தெளிதமிழ் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றினர் அவர்கள் இயற்கை அடந்ததை அடுத்து இப்பொழுது 2021 முதல் துணை ஆசிரியராக இருந்துவந்த புலவர் செ.இராமலிங்கன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பேற்றுத் தெளிதமிழ் திங்களிதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தமிழ்மாமணிகள் புலவர் அரங்கநடராசனார் , புலவர் துரை.மாலிறையன், புலவர் இலக்கியன், புலவர் பூங்கொடிபராங்குசம் ஆகியோரின் துணையுடன் நடத்தப்பட்டு வருகின்றது.முன்னதாக துணை ஆசிரியர்களாக, புலவர் அரங்கபணிக்குன்றன், பேராசிரியர் தேவமைந்தன்,பழந்தமிழ்ப் பாவலர் இரா.இளமுருகன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.