தெளிந்த நீர்ப்படலம்
உப்புநீரில், தூய நீர்ப் படலம் குவிந்த வடிவில் இருக்கும். இதை நீரியல் அறிஞர்கள் லென்ஸ் என்ற பெயரால் அழைக்கின்றனர். மழைநீர் மண்ணிற்கு அடியில் சென்று கடல்நீரில் கலக்கும்போது இவ்வாறு தோன்றும். தெளிந்த நீர்ப்படலமானது, சிறு பவளத் தீவிற்கு அருகில் தோன்றும். குடிநீர் எடுக்கும் கிணறுகளுக்கு அருகிலும் கிடைக்கும். கைபென்-ஹெர்சுபெர்க் லென்சுகள் இதன் வகைகளில் ஒன்று.