தெவாசிசு பட்டாச்சார்யா
தெவாசிசு பட்டாச்சார்யா (Debashish Bhattacharya) (பிறப்பு 12 சனவரி 1963) ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும், பாடகரும், இசையமைப்பாளரும், உலகின் முதல் சிலைடு கித்தார் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவருமாவார். புதிய தொழில்நுட்பம், புதிய ஒலி மற்றும் பாரம்பரியம் மற்றும் தனித்துவமான புதிய கலவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிலைடு கித்தாரில் இந்திய பாரம்பரிய இசையை மறுவரையறை செய்தார். இசையின் சமகால வடிவமைப்பு. லேப் சிலைடு கித்தார் வாசிக்கும் ஒரு இசைத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பித்தார். ஒரு புதிய வகையை (இந்துஸ்தானி சிலைடு கித்தார்), சதுரங்கை ஆனந்தி மற்றும் கந்தர்வி ஆகிய இராகங்களை உருவாக்கி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில், கிராமி பரிந்துரைகள் மற்றும் பல உலக இசை விருதுகளுடன் நிகழ்த்தினார். இவர் மூன்று புதிய இராகங்களை இசையமைத்துள்ளார். மாலை நேரத்திற்கு அமைக்கப்பட்ட பாலாஷ் பிரியா, சங்கர் துவனி மற்றும் சந்திர மாலிகே ஆகியன
பண்டிட் தெவாசிசு பட்டாச்சார்யா | |
---|---|
பிறப்பு | 12 சனவரி 1963 கொல்கத்தா |
இசைக்கருவி(கள்) | லேப் எஃகு கித்தார் |
இசைத்துறையில் | 1975– தற்போது வரை |
இணைந்த செயற்பாடுகள் | பிரிஜ் பூசண் காப்ரா சுபாஷ் பட்டாச்சார்யா ஆனந்தி பட்டாச்சார்யா (மகள்) சூர்யதீப்த பட்டாச்சார்யா (மகன்) ஜான் மெக்லாகின் மார்ட்டின் சிம்சன் ஜெர்ரி தக்ளசு ஜெப் சைப் |
இணையதளம் | www |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபட்டாச்சார்யா கொல்கத்தாவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். பாரம்பரிய இந்திய பாடகர்களான இவரது பெற்றோர் இருவரும் இவருக்கு இசை குறித்த அடிப்படை புரிதலை அளித்தனர். இவர் முதலில் மூன்று வயதில் ஒரு கித்தார் இசைக்கத் தொடங்கினார். இவரது தந்தை அவருக்கு முழு அளவிலான ஹவாய் தாயரிப்பான எஃகு கித்தாரை கொடுத்தார். கொல்கத்தாவின் அனைத்திந்திய வானொலியில் தனது 4 வயதில் அறிமுகமானார்.
15 வயதில் இவர் தனது முதல் சதுரங்கை வடிவமைத்து இந்துஸ்தானி சிலைடு கித்தார் என்ற வகையை உருவாக்கினார். 20 வயதில், அனைத்திந்திய வானொலியின் தேசிய இசை போட்டியில் வென்றதற்காக இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. 21 வயதில், இந்திய ஸ்லைடு-கித்தார் முன்னோடியான பிரிஜ் பூசண் கப்ராவின் கீழ் படிப்பதற்காக பத்து ஆண்டுகள் செலவிட்டார்.
2018 ஆம் ஆண்டில் அவர் தனது மகள் ஆனந்தி பட்டாச்சார்யாவின் ஆனந்தி ஜாய்ஸ் அபௌன்ட் என்ற தனது முதல் இசைத் தொகுப்பை தயாரித்தார்.
குறிப்புகள்
தொகு- Andrew Gilbert Sliding between cultures, instruments: Debashish Bhattacharya merges the Hindustani and blues traditions The Boston Globe, 6 April 2008.