தெ புக் ஆஃப் கட்சி விமன்

தெ புக் ஆஃப் கட்சி விமன்:ஃபாவ்ரிட் ஸ்டோரிஸ் ஆஃப் கரேஜ் அண்ட் ரெசிலியன்ஸ் (The Book of Gutsy Women: Favorite Stories of Courage and Resilience) என்பது இலரி ரோதம் கிளிண்டன், முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி, ஆளுநர் மற்றும் மாநில செயலாளர் மற்றும் அவரது மகள் செல்சியா கிளிண்டன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இது இலரி கிளிண்டனின் எட்டாவது புத்தகம், சைமன் & ஷஸ்டர் எனும் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது.

இந்த நூல் அக்டோபர் 1, 2019 அன்று வெளியிடப்பட்டது, மேலும் இந்த நூல் சிமாமந்த நாகொசி அதிச்சி, மேரி ரிட்டர் பியர்ட், ஹேரியட் டப்மேன், எடித் வின்ட்சர் மற்றும் மலாலா யூசப்சையி உள்ளிட்ட "துணிச்சலான பெண்களின்" உருவப்படங்களை உள்ளடக்கியது. [1] [2] [3] "வரலாறு ஒரு விடயத்தை அனைவருக்கும் சுட்டிக்காட்டுகிறது, உலகிற்கு தைரியமான பெண்கள் தான் தேவை. இந்தக் கதைகளிலிருந்து நீங்கள் வலிமை பெறுவீர்கள் என்று நம்புகிறோம். அதனால் அதில் நாங்கள் ஈடுபடுகிறோம். " என்று இந்த நூலை எழுதிறதற்கான காரணத்தினைக் கூறுகிறார்கள். [1] "இந்த புத்தகம் செல்சியின் உரையாடலின் தொடர்ச்சியாகும், அவளது சிறுவயது முதலே நாங்கள் இது போன்ற உரையாடலை மேற்,கொண்டுள்ளோம் மற்றவர்ளும் இந்த உரையாடலை வரவேற்பதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறோம்" என்று இலரி கிளிண்டன் மேலும் கூறினார், [1]

புத்தகம் அதை மீளாய்வு செய்த ஊடகங்களிலிருந்து கலவையான முதல் நேர்மறை விமர்சன அறிவிப்புகளைப் பெற்றது. இது தி நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாளர் பட்டியலில் பத்து வாரங்கள் இருந்தது.

பின்னணி

தொகு

தாயும் மகளும் இணைந்து எழுதிய முதல் புத்தகம், [4] இதில் "இலரி ", "செல்சியா", மற்றும் "இலரி மற்றும் செல்சியா" என்று பெயரிடப்பட்ட பிரிவுகள் உள்ளன, யார் என்ன எழுதினார்கள் என்பதை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. [5] தோல்வியுற்ற இலரி கிளிண்டனின் குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தின் முன்னாள் பேச்சாளர் லாரன் பீட்டர்சனின் உதவியுடன் இந்த நூல் எழுதப்பட்டது. [5] சுயவிவரங்களுக்கான ஆராய்ச்சி எங்கிருந்து வருகிறது என்ற புத்தகத்தில் அடிக்குறிப்புகள் அல்லது பிற அறிகுறிகள் இல்லை. [6]

ஆகஸ்ட் 2019 இல் திட்டம் அறிவிக்கப்பட்டபோது புத்தகத்தின் நிதி விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.

உள்ளடக்கங்கள்

தொகு

இந்த தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இடம்பெற்றுள்ளனர், இவர்கள் எழுதிய இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. பதிவுகள் 17 ஆம் நூற்றாண்டு கன்னியாஸ்திரி மற்றும் சுய கற்பித்தல் அறிஞர் ஜுவானா இனெஸ் டி லா க்ரூஸ் முதல் சமகால இளம்பருவ காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வரை இடம் பெற்றுள்ளனர், மற்றும் பொது மக்களுக்கு அதிகம் தெரியாத பெண்களும் இதில் உள்ளனர். பரவலாக குறைவான கவனத்தினைப் பெற்றுள்ள வானியலாளர் கரோலின் ஹெர்ஷல், மருத்துவர் மேரி எட்வர்ட்ஸ் வாக்கர், குழந்தை மருத்துவர் மற்றும் பேராசிரியர் மோனா ஹன்னா-அத்திஷா மற்றும் பெண்கள் உரிமை வழக்கறிஞர் மால் அல்-ஷெரீப் ஆகியோர் இந்தத் தொகுதியில் அடங்குவர். கிளின்டன்களின் சில குடும்ப உறுப்பினர்களும் இத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பேர்ள் கப்பல் கட்டுமிடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள் தீயணைப்பு வீரர்களின் குழு அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளது. [7] பேர்ள் துறைமுகத்தின் மீதான தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தவறாக கருதப்பட்டது. கருப்பு மற்றும் வெள்ளை படத்தின் பின்னணியில் உள்ள கதையை புலனாய்வு நிருபர் பில் டெட்மேன் 2011 ஆம் ஆண்டில் விளக்கினார்.[8] இந்த புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக இது வண்ணமயமாக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Flood. 
  2. Hallemann. 
  3. Italie. 
  4. "Hillary, Chelsea to bring 'Gutsy Women' to Portland". KOIN (TV). September 20, 2019. https://www.koin.com/local/multnomah-county/hillary-chelsea-to-bring-gutsy-women-to-portland/. பார்த்த நாள்: October 1, 2019. 
  5. 5.0 5.1 "The Book of Gutsy Women by Hillary and Chelsea Clinton, review: a restrained statement of rebellion". October 1, 2019. https://inews.co.uk/culture/books/book-of-gutsy-women-hillary-chelsea-clinton-review-638845. பார்த்த நாள்: October 1, 2019. 
  6. "Book review: Hillary, Chelsea Clinton offer personal tributes to female heroines". October 4, 2019 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 7, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191007102828/https://www.dispatch.com/entertainmentlife/20191004/book-review--hillary-chelsea-clinton-offer-personal-tributes-to-female-heroines. பார்த்த நாள்: October 7, 2019. 
  7. Mosley (October 1, 2019). "Hillary And Chelsea Clinton On Trump Impeachment, Emails And 'Gutsy Women' Of History". https://www.wbur.org/hereandnow/2019/10/01/hillary-chelsea-clinton-trump-gutsy-women-book. 
  8. Bill Dedman (December 12, 2011). "Pearl Harbor surprise: Photo of female firefighters wasn't from Dec. 7". Open Channel இம் மூலத்தில் இருந்து மே 7, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120507122024/http://openchannel.msnbc.msn.com/_news/2011/12/12/9377669-pearl-harbor-surprise-photo-of-female-firefighters-wasnt-from-dec-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ_புக்_ஆஃப்_கட்சி_விமன்&oldid=3369674" இலிருந்து மீள்விக்கப்பட்டது