தேக்க அழுத்தம்

பாய்ம இயக்கவியலில், தேக்க அழுத்தம் (Stagnation pressure) (அல்லது மொத்த அழுத்தம்) என்பது பாய்விலிருக்கும் தேக்கப்புள்ளியிலிருக்கும் நிலை அழுத்தம் ஆகும்.[1]

ஒரு தேக்கப்புள்ளியில் பாய்மத் திசைவேகம் சுழியமாகும், மேலும் பாய்வின் அனைத்து இயக்க ஆற்றலும் அகவெப்பமாறாச் செயன்முறையில் அழுத்த ஆற்றலாக மாற்றப்படுகிறது. இயல்சீரோட்ட இயக்கநிலை அழுத்தம், இயல்சீரோட்ட நிலை அழுத்தம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே தேக்க அழுத்தமாகும்.[2] தேக்க அழுத்தம் சிலவேளைகளில் பிடோட் அழுத்தம் எனவும் குறிக்கப்பெறலாம், ஏனெனில் அது பிடோட் குழாய் மூலமாக அளவிடப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. Clancy, L.J., Aerodynamics, Section 3.5
  2. Stagnation Pressure at Eric Weisstein's World of Physics (Wolfram Research)

குறிப்புதவிகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேக்க_அழுத்தம்&oldid=2697386" இலிருந்து மீள்விக்கப்பட்டது