தேக்க நிலைப்பு உணவு
தேக்க நிலைப்பு உணவு அல்லது நீண்டநாள் கெடாத உணவு (Shelf-stable food) (சில நேரங்களில் சுற்றுப்புற சூழ்நிலை உணவு) என்பது காற்று புகாத கொள்கலனில் அறை வெப்பநிலையில் பாதுகாப்பாக வைக்கக்கூடிய ஒரு வகை உணவு. இது சாதாரணமாக குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கப்படும் உணவை சார்ந்ததாகும், ஆனால் இவை பதப்படுத்தப்பட்டு வருகின்றன, இதனால் அவை பாதுகாப்பான அறை அல்லது சுற்றுப்புற வெப்பநிலையிலேயே நீண்ட காலம் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன .உதாரணமாக 1983 இல் முதலாவதாக உருவாக்கப்பட்ட ராஞ்ச் உணவு அலங்கார தேக்க நிலைப்புமுறையால் காய்கறி/பழக் கலவையானது (salad) 150 நாட்களுக்கு கெடாமல் இருந்தது. [1] பல்வேறு உணவுப் பாதுகாப்பு முறைகள் மற்றும் உணவு பொதியல் தொழில் நுட்பங்கள் உணவுப் பொருட்களின் வாழ்வை அதிக நாட்கள் நீட்டிக்க பயன்படுத்தப்படுகின்றன. உணவு பொருளில் உள்ள தண்ணீரின் அளவை குறைப்பது, அதன் அமிலத்தன்மை அதிகரித்தல் அல்லது கதிர்வீச்சி ஏற்படுத்துதல் [2] அல்லது உணவை கொதிக்கவைத்து, பின்னர் அதை காற்று புகாத இறுக்கமான கொள்கலனில் அடைத்து வைத்தல் போன்ற வழிகளைக் கடைபிடிப்பதன் மூலம் உணவுப் பொருட்களில் நுண்கிருமிகள் பெருகும் என்ற அச்சப்பட தேவையில்லை. மேற்கூறிய அனைத்து வழிமுறைகளுமே நீண்டநாள் கெடா உணவின் தன்மையையும் சுவையையும் மாறுபடுவதிலிருந்து தடுக்கிறது.
சில உணவுகளுக்கு மாற்று இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண எண்ணெய்கள் மற்றும் கொழுப்பு பொருட்களால் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் குளிரூட்டியில் வைக்கப்படவில்லை என்றால் கெட்டுப்போய்விடும். இதற்குப் பதிலாக ஐதரசனேற்றம் எண்ணெயில் தயாாிக்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போவதைத் தாமதப்படுத்துகிறது. இது தொழில்துறை உணவு உற்பத்தியில் பொதுவான அணுகுமுறையாகும், ஆனால் மாறுபக்க கொழுப்புகளுடன் (trans fat) தொடர்புடைய சுகாதார அபாயங்கள் பற்றிய சமீபத்திய கவலைகள் பல அதிகார எல்லைகளில் தங்கள் கடுமையான கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளன. [3] பல இடங்களில் மாறுபக்க கொழுப்புக்கள் தடை செய்யப்படவில்லை என்றாலும், புதிய அடையாளம் இடுதல் சட்டங்கள் (அல்லது விதிகள்) உள்ளன. அவை தொகுப்புகளில் அச்சிடப்பட வேண்டிய தகவல்களைக் கொண்டிருக்கின்றன. மாறுபக்க கொழுப்பு அளவு பற்றிய தகவல்களை சில பொருட்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Koerner, Brendan I. (August 5, 2005). "America's love-affair with ranch dressing". Slate Magazine. பார்க்கப்பட்ட நாள் December 30, 2009.
- ↑ Harris, Gardiner (August 21, 2008). "Irradiation: A safe measure for safer iceberg lettuce and spinach". The New York Times. பார்க்கப்பட்ட நாள் December 30, 2009.
- ↑ Leth, Torben (2012). "Denmark's trans fat law". tfX: The campaign against trans fat in foods. பார்க்கப்பட்ட நாள் December 14, 2011.