தேசியப் பெண் மருந்தாளுனர்கள் சங்கம்

தேசியப் பெண் மருந்தாளுனர்கள் சங்கம் (National Association of Women Pharmacists) 1905 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதி இலண்டனில் நிறுவப்பட்டது. மார்கரெட்டு எலிசபெத் புக்கானன் மற்றும் இசபெல்லா இசுகின்னர் கிளார்க்கு ஆகியோருக்கு இடையே நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆரம்ப கூட்டங்கள் இசுகின்னர் கிளார்க்கின் வீட்டில் நடைபெற்றன. பிரதான அல்லது துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் சேர்க்கை என்று கட்டுப்படுத்தப்பட்டது. 50 பெண்கள் உடனடியாக சங்கத்தில் இணைந்தனர். 1912 ஆம் ஆண்டில் புக்கானன், நடைமுறையில் மருந்தகத்தை கடைப்பிடிக்கும் அனைத்து பெண்களும் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறினார்.[1] புக்கான ஒரு கட்டத்தில் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

எல்சி ஊப்பர் 1879-1969 காலத்தில் சங்கத்தின் முதல் செயலாளராக இருந்தார். இவரும் மற்ற உறுப்பினர்களும் பெண்களுக்கான வாக்குரிமையை ஆதரித்து 1911 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 அன்று வெசுட்மின்சுடரில் இருந்து ஆல்பர்ட் அரங்கம் வரை 40,000 பேர் கொண்ட பெண்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.[3] 1911 ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற்ற ஊர்வலத்திற்கு ஆதரவாக வேதியியலாளர் மற்றும் மருந்தாளுனர்களும் பெண் மருந்தாளர்களின் புகைப்படங்களை சுமந்து சென்று எல்சி ஊப்பரிடம் சமர்ப்பித்தனர். இவர் அப்போது அறிவியல் பிரிவில் இருந்தார். பல பெண் மருந்தாளுநர்கள் இரண்டரை மணிநேர அணிவகுப்பை மேற்கொண்டனர்.[4]

இச்சங்கம் ராயல் பார்மாசூட்டிகல் சங்கத்திற்கு ஆதரவளிக்கிறது மற்றும் ஒத்துழைக்கிறது, ஆனால் இது ஒரு சுயாதீனமான சங்க அமைப்பாகும்.[5]

2019 ஆம் ஆண்டின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சங்கத்தை கலைத்து விட முடிவு எடுக்கப்பட்டது.[6] ஆனால் மருந்தாளுனர்களின் பாதுகாப்பு சங்கத்திற்குள் ஒரு அரை தன்னாட்சி வலைப்பின்னலாக தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Rayner-Canham, Marlene; Rayner-Canham, Geoffrey (2008). Chemistry Was Their Life: Pioneering British Women Chemists, 1880-1949. Imperial College Press. p. 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1860949878.
  2. Rayner-Canham, Marlene; Rayner-Canham, Geoffrey (2008). Chemistry Was Their Life: Pioneering British Women Chemists, 1880-1949. Imperial College Press. p. 402. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1860949878.
  3. "Celebrating Elsie Hooper, early pioneer for women pharmacists, on International Women's Day". Pharmaceutical Journal. 8 March 2018. https://www.pharmaceutical-journal.com/20204513.article. பார்த்த நாள்: 10 May 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Women pharmacists demand the vote". Wellcome Library. 13 October 2015. http://blog.wellcomelibrary.org/2015/10/women-pharmacists-demand-the-vote/. பார்த்த நாள்: 13 May 2018. 
  5. "The Association's Mission". NAWP. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
  6. "The future of NAWP". NAWP. 6 May 2019. http://www.nawp.org.uk/news/. பார்த்த நாள்: 6 May 2019. 
  7. "National Association of Women Pharmacists to become part of Pharmacists’ Defence Association". Pharmaceutical Journal. 3 October 2019. https://www.pharmaceutical-journal.com/20207148.article. பார்த்த நாள்: 20 November 2019. [தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்

தொகு