தேசிய உதவித்தொகை புறையம்

தேசிய உதவித்தொகை புறையம் (National Scholarship Portal ,சுருக்கமாக NSP) அல்லது தேசிய உதவித்தொகை இணையவாசல் என்பது இந்திய அரசாங்கத்தின் இணையப் புறையம் ஆகும், இது மாணவர்களுக்கு அரசு உதவித்தொகைகளை விண்ணப்பித்தல், செயலாக்குதல், சரிபார்த்தல் மற்றும் அனுமதித்தல் ஆகிய செயல்பாடுகளைச் செய்ய வழிவகுக்கிறது. இது முரண்பாடுகளைக் குறைப்பது மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குவதற்கான பொதுவான, பயனுள்ள மற்றும் வெளிப்படையான வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசாங்கத்தால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான உதவித்தொகைகளை ஒன்றிணைப்பதன் மூலம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கான "ஒரே தள" புறையமாக இது உள்ளது. இது அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா மற்றும் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வரலாறு தொகு

2016 இல் இந்திய அரசு தேசிய உதவித்தொகை இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.

2018 ஆம் ஆண்டில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இணையவாசலை அணுகுவதற்கு இந்திய அரசாங்கம் தேசிய உதவித்தொகை புறைய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இது சிறுபான்மை நலத்துறைஅமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.

முழு இணைய அடிப்படையிலான புறையம் 2020 இல் தொடங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டில், குசராத்தைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட சிறுமிகளின் உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கத் தவறியதற்காக இது விமர்சிக்கப்பட்டது, இதனால் அவர்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டது.

இது நேரடிப் பலன் பரிமாற்ற அமைப்பு மூலம் நிதிகளை விநியோகிக்கிறது. [1]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு