தேசிய ஒன்றிணைவு அரசாங்கம்

தேசிய ஒன்றிணைவு அரசாங்கம் அல்லது தேசிய ஒன்றிய அரசாங்கம் என்பது சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முதன்மைக் கட்சிகளை அல்லது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் ஆகும். இதில் முதன்மையான எதிர்க்கட்சி அவசியம் உள்ளடக்கப்பட வேண்டும். இது பொதுவாகப் போர் மற்றும் அவசரகால நிலைமைகளில் ஆளும் கட்சியால் முடிவெடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும். சிலவேளைகளில் எதிர்க்கட்சிகள் பலம் பொருந்தியதாக இருக்கும் சந்தர்ப்பங்களிலும் மேற்கொள்ளப்படும்.