தேசிய கயால் ஆராய்ச்சி மையம்
தேசிய கயால் ஆராய்ச்சி மையம் (National Research Centre on Mithun) என்பது இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள தன்னாட்சி ஆராய்ச்சி மையமாகும். இது அறிவியல் மற்றும் நிலையான கயால் (ஒரு வகை பெரிய மாடு) வளர்ப்பு முறையை உருவாக்குவதற்கும் கயால் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்சிபெமாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணி ஆணை 1997 மற்றும் 2006-ல் மறுவரையறை செய்யப்பட்டது.[1][2][3]
வகை | ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1988 |
சார்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் |
பணிப்பாளர் | மீரஜ் ஹைதர் கான் |
அமைவிடம் | தே. நெ. 39, ஜமாபானி, மெட்சிபெமா, திமாப்பூர் மாவட்டம், நாகலாந்து , , 25°45′29″N 93°50′31″E / 25.758°N 93.842°E |
வளாகம் | நகரம் |
சுருக்கப் பெயர் | NRCM |
இணையதளம் | nrcmithun |
இந்த மையம், நாட்டில் கிடைக்கும் கயால் மூலவுயிர்முதலுரு (ஜெர்ம்பிளாசம்) அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் வகைப்படுத்துதல் மற்றும் இறைச்சி மற்றும் பாலுக்கான காயலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய பணியாகும். கயால் பற்றிய மூலவுயிர்முதலுரு மற்றும் தகவல் மையத்தின் களஞ்சியமாகச் செயல்படுகிறது.[4][5][6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Semi-intensive Mithun Farming as Alternative Source of Livelihood
- ↑ "NRC on Mithun celebrates 31st Foundation Day". Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Centre to support Nagaland in mithun development, conservation". Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ MoU to boost mithun rearing in Mizoram
- ↑ "ICAR-NRC Mithun 31st foundation day". Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Centre to support Nagaland in mithun development, conservation". Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.