தேசிய கற்றல் அடைவு ஆய்வு நான்காம் சுற்று
இந்திய தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ( NCERT ) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கற்றல் அடைவுகள் குறித்து 2015 ஆம் ஆண்டு செய்த ஆய்வின் (National Achievement Survey 2015) அறிக்கை இது. [1].
அறிமுகம்
தொகு‘கற்றல் அடைவு’ என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும தாக்கத்தை ஏற்படுத்தும் தகவல் ஆகும். இதனை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி ஆராய்ச்சிப் பிரிவு ( ESD NCERT )செய்து முடித்துள்ளது.இந்த ஆய்வு மாணவர்களின் கற்றல் அடைவின் தற்பொழுது உள்ள நிலவரம் குறித்து ஏராளமான பயனுள்ள தகவல்களைத்தருகிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுகள் மொழிப்பாடம், கணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் ஆகியபாடங்களில் எவ்வாறு உள்ளது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.
திட்டம்
தொகு34 மாநிலங்களில் அறிவியல் பூர்வமாக மாதிரிகள் எடுக்கப்பட்டு செய்யப்பட்ட ஆய்வு இது. ஆய்வில் முறையாக தரவுகள் பெறப்பட்டு அவை “பதில் துலங்கல் விதியின்” கீழ் (Item Response Theory) விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவை பல வகைகளாகப் பிரிக்கப்பட்டும், மாநிலங்கள் வாரியாகவும் அடுக்கப்பட்டு தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் இம்முடிவுகள் சென்ற முறையின் முடிவுகளுடன் ஒப்பிடும் வகையிலும் தரப்பட்டுள்ளன. இவ்வகையான ஒப்பீடு மாநிலங்க்கிளுக்கிடையே மட்டுமல்லாமல், அந்த மாநிலத்துள்ளேயே சென்ற ஆய்விற்கும் இந்த ஆய்விற்கும் ஒப்பிடும் வகையிலும் அளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் ஏற்ற தாழ்வுகளை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க இயலும். 2001 ஆம் ஆண்டிலுருந்து மாதிரிகளின் அடிப்படையில் இது போன்ற கற்றல் அடைவு ஆய்வுகள் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (SSA ) செய்யப்பட்டு வருகின்றது
முக்கிய அம்சங்கள்
தொகு- மொழிப்பாடம், கணிதம், சூழ்நிலை அறிவியல் ஆகிய மூன்றுபாடங்களில் கற்றல் ஆடைவு ஆய்வுகள் நடத்தப்பட்டன
- பதில் துலங்கல் விதி (Item Response theory) யின் கீழ் மாணவர்கள், கேள்வியின் கடினத்தன்மையக்கு ஏற்றவாறு எவ்வாறு பதில் அளித்துள்ளனர் என்று கணித்து அவர்கள் திறமையை எடை போடும் விதமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது
- முந்தய முடிவுகளுடன் ஒப்பிடுவதற்கு ஏதுவாகவும், திறமையனதாகவும், துல்லியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது
- ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று மாதிரி வினாத்தாள் கையேடு வடிவமைக்கப்பட்டு, அளவீடுகள் துல்லியமாகவும் ஆழமாகவும் அமையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது
திட்டத்தின் செயலாக்கம் திறமையாக கண்காணிக்கப்பட்டது.
மாநிலவாரியான கற்றல் அடைவுகள்
தொகுவ எண் | மாநிலம் | மொழி படிப்பு | கணிதம் | சூழ்நிலையியல் | |
---|---|---|---|---|---|
1 | ஆந்திரா | 44 | 44 | 48 | |
2 | அருணாசலம் | 39 | 39 | 46 | |
3 | அஸ்ஸாம் | 47 | 53 | 54 | |
4 | பிகார் | 29 | 45 | 43 | |
5 | சட்டீச்கர் | 34 | 32 | 37 | |
6 | தில்லி | 39 | 39 | 41 | |
7 | கோவா | 51 | 40 | 49 | |
8 | குஜராத் | 46 | 51 | 52 | |
9 | ஹரியானா | 45 | 49 | 49 | |
10 | ஹிமாசலம் | 49 | 49 | 51 | |
11 | ஜம்மு காச்மீர் | 45 | 50 | 54 | |
12 | ஜார்கண்டு | 39 | 45 | 48 | |
13 | கர்னாடகா | 50 | 55 | 58 | |
14 | கேரளா | 54 | 42 | 42 | |
15 | மத்திய பிரதேசம் | 40 | 45 | 48 | |
16 | மஹாராச்டிரம் | 49 | 45 | 47 | |
17 | மணிப்பூர் | 53 | 55 | 56 | |
18 | மேகாலாயா | 38 | 41 | 57 | |
19 | மிசோரம் | 54 | 39 | 54 | |
20 | நாகாலாந்து | 54 | 39 | 54 | |
21 | ஒரிஸ்ஸா | 41 | 45 | 47 | |
22 | பஞ்சாப் | 49 | 45 | 53 | |
23 | ராஜஸ்தானம் | 42 | 49 | 47 | |
24 | சிக்கிம் | 47 | 46 | 52 | |
25 | தமிழ் நாடு | 54 | 56 | 60 | |
26 | திரிபுரா | 51 | 48 | 57 | |
27 | உத்திர பிரதேசம் | 49 | 54 | 58 | |
28 | உத்திரகண்ட்டு | 37 | 39 | 41 | |
29 | வங்காளம் | 47 | 47 | 51 | |
30 | இந்தியா | 45 | 46 | 50 |