தேசிய கைத்தறி நாள்
தேசிய கைத்தறி நாள், கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகத்து 7 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1]கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 இலட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.[1] இத்தொழில் இந்தியாவின் ஊரகப் புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது. உலகெங்கும் இருந்து உற்பத்தியாகும் ஆடைகளில், கிட்டத்தட்ட 95% கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.[1]
செயல்பாடுகள்
தொகு2015ஆம் ஆண்டின் ஆகத்து ஏழாம் நாளில், இந்தியப் பிரதமரான நரேந்திர மோதி தேசிய கைத்தறி நாளை வரும் ஆண்டுகளில் இந்திய அரசு கொண்டாடும் என்று கூறி, கைத்தறித் துறைக்கான சின்னத்தை அறிவித்தார்.[2] இவ்விழாவில் கைத்தறித் துறை தொடர்பான 72 விருதுகள் வழங்கப்பட்டன.