தேசிய பசுமைப்படை

தேசிய பசுமைப்படை (National Green Corps) இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும்.[1] இந்த அமைப்பு 1,20,000 பள்ளிகளை உள்ளடக்கியுள்ளது.[2] இது இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும். ஒவ்வொரு பள்ளியிலும் 30 முதல் 50 மாணவர்களை கொண்டு தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் பள்ளி மாணவர்கள் மூலம் மரங்களை நடுவதும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுக்கப்பதும் ஆகும். இந்த மாணவர்கள் பல்லுயிர் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, நெகிழி விழிப்புணர்வு மற்றும் மறுசுழற்சி, ஆற்றல் பாதுகாப்பு, நில பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் வள மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளில் பங்காற்றுகின்றனர்.

உள்ளூரில் காணப்படும் குறிப்பிட்ட சிக்கல்கள் பசுமைப் படை மாணவர்களால் கவனம் செலுத்தப்படுகின்றன. பொதுமக்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்ப்பதற்காக, தேசிய பசுமைப் படையானது இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களுடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக அல்லது சுற்றுச்சூழல் தலையீட்டிற்காக வெளிச்செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நீர் சேகரிப்பு, குறுங்காடுகள், தோட்டம், நெகிழி மேலாண்மை, மக்கும் குப்பைகளை உரமாக்குதல் ஆகியவை தேசிய பசுமைப் படை பள்ளி சுற்றுச்சூழல் படைளில் முக்கியமான செயல்பாடுகளாகும். இந்த தேசிய பசுமைப் படை பள்ளி சுற்றுச்சூழல் மன்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊடகமாகப் பயன்படுத்தி இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் மூலம் சுற்றுச்சூழல் ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை ஊக்குவிக்கின்றன.

இந்தியாவில் உள்ள 250 மாவட்டங்களில் ஒவ்வொன்றும் சுமார் 250 தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் உள்ளன. இந்த தேசிய பசுமைப் படைகளுக்கு ஆண்டு மானியமாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு மாநில ஒருங்கிணைப்பு அதிகாரியைக் கொண்டுள்ளனர்.

வரலாறு

தொகு

இந்தியாவில் தமிழ்நாட்டில் 1998ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் மூன்று மாவட்டங்களில் 170 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளில் சூழல் மன்றங்கள் துவங்கப்பட்டு அதன் பின்னர் மாவட்டந்தோறும் 40 பள்ளிகள் வீதம் 1200 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேசிய பசுமைப்படை என்னும் திட்டத்தினை 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தி தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் 8000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பதின்மப் பள்ளிகளில், சூழல் மன்றங்கள் நிறுவப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://envfor.nic.in/divisions/ee/ngc/index_ngc.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_பசுமைப்படை&oldid=4048244" இலிருந்து மீள்விக்கப்பட்டது