தேசிய புரோபேன் வாயு சங்கம்

தேசிய புரோபேன் வாயு சங்கம் (National Propane Gas Association) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வர்த்தக அமைப்பாகும். புரோபேன் தொழிற் துறையில் ஈடுபட்டுள்ள 3,500 நிறுவனங்களை இச்சங்கம் உள்ளடக்கியுள்ளது.[1] ஆற்றல் தொழில் வல்லுநர்களுக்கான பயிற்சி தரங்களை தேசிய புரோபேன் வாயு சங்கம் வழங்குகிறது. புரோப்பேன் எரிபொருளை கொண்டு செல்லுதல், பகிர்ந்தளித்தல், பயன்பாடு தொடர்பான பாதுகாப்பு சம்பவங்களை ஆய்வு செய்து இச்சங்கம் தொகுத்துள்ளது.[2]

தேசிய புரோபேன் வாயு சங்கம்
National Propane Gas Association
உருவாக்கம்1931; 93 ஆண்டுகளுக்கு முன்னர் (1931) தேசிய குப்பி வாயு சங்கம்
லிசுலீ, இலினொய், அமெரிக்கா
நிறுவனர்கள்எச். எமெர்சன் தாமசு
சியார்ச்சு ஒபெர்பெல்
மார்கு ஆண்டன்
தலைமையகம்வாசிங்டன், அமெரிக்கா.
வலைத்தளம்npga.org

தேசிய புரோபேன் வாயு சங்கம் முதலில் அமெரிக்காவின் இல்லினாய்சு மாநிலத்திலுள்ள லிசுலீ கிராமத்தில் இருந்தது. ஆனால் பின்னர் இதன் தலைமையகம் 2002 ஆம் ஆண்டு வாசிங்டன் நகருக்கு மாற்றப்பட்டது.[3]

புரோபேன் அரசியல் நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு ஒன்றையும் இச்சங்கம் இயக்குகிறது.[4] புரோபேன் தொழிலுக்கான வர்த்தக மாநாடுகளை நடத்துகிறது இவ்வமைப்பு திட்டமிட்டு நடத்துகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு