தேசிய விண்வெளி வீரர் நாள்
தேசிய விண்வெளி வீரர் நாள் (National Astronaut Day) அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் செப்பர்டு இயக்கிய முதல் அமெரிக்க மனித விண்வெளிப் பயணத்தை நினைவுகூருகிறது. பிரீடம் 7 விண்கலத்தில் 15 நிமிட சுற்றுப் பயணத்தின் போது செப்பர்டு விண்வெளியில் அதிகபட்சமாக 116 மைல்கள் (187 கிலோமீட்டர்) உயரத்தை அடைந்தார். 1961 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாளன்று அமெரிக்காவின் மனித விண்வெளிப்பயணம் தொடங்கிய நாள் என்பதால் அமெரிக்கா இந்நாளை தேசிய விண்வெளி வீரர் நாளாக அனுசரிக்கிறது. 2017 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 5 ஆம் தேதி இந்நாள் அங்கு அனுசரிக்கப்பட்டு வருகிறது.[1]
தேசிய விண்வெளி வீரர் நாள் National Astronaut Day | |
---|---|
கடைபிடிப்போர் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வகை | மதச்சார்பற்று |
முக்கியத்துவம் | 1961 ஆம் ஆண்டின் முதல் அமெரிக்க மனித விண்வெளிப் பயணத்தை நினைவுகூருகிறது. |
நாள் | 5 மே |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
விண்ணோடி அல்லது விண்வெளி வீரர் என்பவர் மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவராக இருப்பார். இவரால் விண்கலம் ஒன்றை ஓட்டவும், வழிநடத்தவும் அல்லது விண்கலத்தில் இருந்து சேவை செய்ய திறன் பெற்றவராகவும் இருப்பார்.
மூன்று நாட்களுக்கு முன்பே பறக்க இருந்த செப்பர்டின் பயணத் திட்டம் சாதகமற்ற வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரீடம் 7 விண்கலத்தில் செப்பர்டு காலை 5:15 மணிக்கு ஏறினார். மேலும் தாமதங்கள் மற்றும் பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு நான்கு மணி நேரம் கழிந்த பின்னரே செப்பர்டு இறுதியாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். விண்கலம் 15 நிமிடங்கள் 22 வினாடிகள் விண்ணில் வலம் வந்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wall, Mike (May 5, 2017). "Happy National Astronaut Day!". Space.com. பார்க்கப்பட்ட நாள் May 6, 2018.
- ↑ "National Astronaut Day Commemorates Launch of First American in Space". Tech Times. May 5, 2018. http://www.techtimes.com/articles/226990/20180505/national-astronaut-day-commemorates-launch-of-first-american-in-space.htm. பார்த்த நாள்: 2018-05-07.