தேச. மங்கையர்க்கரசி
தேச. மங்கையர்க்கரசி (பிறப்பு: 19 மே 1984) தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்.
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுதேச. மங்கையர்க்கரசி தேவி சண்முகம், பாக்கியலட்சுமி ஆகியோருக்கு மதுரையில் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரியும், ஒரு சகோதரரும் உண்டு. எட்டாவது வகுப்பு வரை மதுரையில் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள ரோசரி சர்ச் பள்ளியிலும், பின்னர் மதுரையில் உள்ள ஈ. வே. ரா நாகம்மை பள்ளியிலும் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் இளநிலை (தமிழ் இலக்கியம்) பயின்று பட்டம் பெற்றார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் இவருக்கு தெரியும்.
இலக்கியப் பணி
தொகுதந்தையின் ஊக்குவிப்பில் மேடைகளில் இலக்கியச் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் பிற தமிழ்ப் பாயிரங்களில் புலமை பெற்றார். கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்ட இவர் பரதநாட்டியக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.
இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, மொரீசியசு போன்ற நாடுகளில் இலக்கிய உரைகள் ஆற்றியுள்ளார். இவரது இலக்கியச் சொற்பொழிவுகள் 12 குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.
எழுதிய நூல்கள்
தொகு- இந்து மதம் என்ன சொல்கிறது?
- நூறு ஆண்டுகள் இன்பச் சுற்றுலா
விருதுகளும், பட்டங்களும்
தொகு- கலைமாமணி, பெப்ரவரி 13, 2011
- கிருபானந்தவாணி எனும் பட்டம்