தேடல் எனும் சொல் தேடுகிறேன், தேடினேன், தேடுவேன் போன்று வரும் வினைச் சொற்களுக்கானப் பெயர்சொல்லாகும்.

புழக்கத்தில்தொகு

இச்சொல் பொதுவாக எல்லாத் தமிழரதும் பயன்பாட்டில் இருக்கின்றது என்றப்போதும், ஆசிரியர் மற்றும் மாணவர் மத்தியில் அதிகமாகப் புழக்கத்தில் பயன்படுகின்றது. அதாவது கல்வி மற்றும் அறிவுக்கு அப்பால் ஒரு மனிதனிடம் தேடலும் இருக்க வேண்டும் என்பது அடிக்கடி அங்கு அநேகமானோரால் வழியுறுத்திப் பேசப்படும் ஒரு சொல்லாகும்.

தேடலின் அவசியம்தொகு

கற்கும் கல்வியிலும் அறிவியல் கருத்துக்களிலும் கூட உண்மையின் தன்மையை உறுதிச் செய்வதற்கான “தேடல்” இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருற்கள், கருத்துக்கள், அறிக்கைகள், ஆய்வுகள் தொடர்பிலும் மேலதிக “தேடல்” அவசியம். “தேடல்” ஒரு மனிதனை நெறிப்படுத்தும்.

இணையத்தில்தொகு

இன்று இணையத்தில் தகவல் தேடல் தொடர்பாகவும் கூகிள் தேடல், யாஹு தேடல் என்று இச்சொல் அனைவரிடமும் புழக்கத்தில் இருப்பதனை அவதானிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடல்&oldid=2480813" இருந்து மீள்விக்கப்பட்டது