தேன்கூடு என்பது தேனீக்களால் கட்டப்பட்ட அறுகோண முள்ளந்தண்டு மெழுகு செல்கள் ஆகும்.

ஈரான், சாரீனில் விற்கப்படும் தேன்கூடுகள்

தேனீ வளர்ப்பவர்கள் தேன் அறுவடை செய்ய முழு தேன்கூடுகளை அகற்றலாம். தேனீக்கள் 1 lb 454 கி மெழுகு உற்பத்தி செய்ய 8.4 lb (3.8 kg) அளவு தேனை உட்கொள்கிறது.[1]

பொருளாதார நோக்கம்

தொகு

இதன் பொருளாதார நோக்கம் என்னவென்றால் தேனை அறுவடை செய்த பிறகு மெழுகினை அதன் கூட்டிலேயே வைப்பதுதான். தேன்கூட்டிலிருந்து தேன் அறுவடை செய்யும்போது அதனை நடுவண் விலகு விசை இயந்திரத்தில் சுற்றும் போது தேனின் வடிவமைப்பின் அடிப்படையில் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேன்கூடு சிறிது கலைந்துவிட்டாலும் அதன் மெழுகு வேறு உபயோகத்திற்குப் பயன்படுகிறது. அவற்றுள் அறுகோண வடிவத்துடன் தேன் கூட்டின் அடித்தளத்தின் தாள்களை உருவாக்குவதற்கும், இவ்வகை தாள்கள் தேனீக்களை சிறிதளவு முயற்சியிலேயே கூடு கட்டுவதற்கு ஏதுவாகப் பயன்படுகிறது. மற்றும் வேலைக்காரத்தேனீக்கள் செல் தளங்களின் அறுகோண வடிவமானது பெரிய ட்ரோன் செல்களை உருவாக்குவதிலிருந்து தடுக்கிறது.

Apis dorsata, giant honeybee, its huge nest on Polyalthia tree

தேனடை

தொகு

புதிய தேனடை சில சமயங்களில் விற்கப்படுகிறது அல்லது தேன் அப்படியே சமையலில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தேன் ரொட்டியின் மேல் பரவலாக தேய்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது அல்லது சமையலில் இனிப்பானாக பயன்படுத்தப்படுகிறது. கலங்களில் புழுக்கூடுகள் பொதிந்து இருப்பதாலும் மற்றும் தேனீ வளர்ப்பவர்களின் கால் தடமறிதல் காரணமாகவும் தேனடை காலப்போக்கில் இருண்டதாக மாறுகின்றன. பல குளவிகள், குறிப்பாக பொலிஸ்டினா மற்றும் வெஸ்பீனா, மெழுகுக்கு பதிலாக காகிதத்தில் செய்யப்பட்ட அறுகோண முலாம் பூசப்பட்ட தேன் கூடுகளை உருவாக்குகின்றன; சில இனங்களில் (ப்ரைகிஸ்ட்ரா மெலிஃபிகா போன்றவை) தேனானது தேன் கூட்டில் சேமித்து வைக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக ஒரு காகித தேன்கூட்டை உருவாக்குகிறது. இருப்பினும், "தேன்கூடு" என்ற வார்த்தை பெரும்பாலும் அத்தகைய கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படாது. தேனீக்கள் தேன் கூடுகளை ஒவ்வொரு பகுப்பின் மேலிருந்து உருவாக்கத் தொடங்குகிறது. ஒரு செல் தேன் நிரப்பப்பட்டால், தேனீக்கள் அதை மெழுகுடன் மூடிவிடுகின்றது.

அறுகோண வடிவம்

தொகு
A computer-generated model of a honeycomb cell, showing a hexagonal tube terminating in three equal rhombuses that meet at a point on the axis of the cell.

தேன்கூளங்கள் வேறு எந்த வடிவத்தை விடவும், அறுகோண வடிவத்திலே செய்யப்படுகின்றன என்பதற்கான இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. முதலாவதாக, அறுகோண ஓடானது சமஅளவு அளவிலான செல்களுடன் (கண்ணறை அல்லது கலத்தின்) ஒரு பகிர்வை உருவாக்குகிறது. அதே நேரத்தில் கலத்தின் மொத்த சுற்றளவையும் குறைக்கிறது. .[2]எனவே, ஒரு அறுகோண அமைப்பு குறிப்பிட்ட அளவுக்குள்ளான கலங்களை உருவாக்க மிகக் குறைந்த பொருள் பயன்படுத்தி குறிப்பிட்ட கனஅளவிற்குள் கலங்களின் அணிக்கோவையை உருவாக்குகிறது. இதனைப்பற்றி ஜான் ப்ரொஸிக் என்பவரும் தோமஸ் ஹேல்ஸ் என்பவரும் தெளிவாக நிரூபித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு தனித்தனி தேனீக்களும் கலங்களை இணைப்பதாலும் இவ்வகை வடிவம் கிடைக்கிறது. கலங்களின் (செல்களின்) வடிவமானது இரண்டு எதிர்முக அமைப்புள்ள தேன்கூடு அடுக்குகள் ஒன்றோடொன்று கூடி, மூடப்பட்ட முனைகளின் ஒவ்வொரு பக்கமும் எதிர்முக கலங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டு அமைகின்றது.

Apis dorsata, giant honeybee, its huge nest on Polyalthia tree
A computer-generated model of two opposing honeycomb layers, showing three cells on one layer fitting together with three cells on the opposing layer.


அரசித் தேனீக்காக வெலைக்கரத் தேனீகள் செம்புள்ளியுடன் ஐந்து மூலைகள் உள்ள ஒழுங்கற்ற வெட்டுமுகம் உள்ள பெரிய தேன்கூட்டைக் கட்டுகின்றன.[3]

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Graham, Joe. The Hive and the Honey Bee. Hamilton/IL: Dadant & Sons; 1992; ISBN.
  2. Nazzi, F (2016). "The hexagonal shape of the honeycomb cells depends on the construction behavior of bees". Scientific Reports 6: 28341. doi:10.1038/srep28341. பப்மெட்:27320492. Bibcode: 2016NatSR...628341N. 
  3. Thompson, D'Arcy Wentworth (1942). On Growth and Form. Dover Publications. ISBN.

மேலும்படிக்க

தொகு

உலோ.செந்தமிழ்க்கோதை,தேன்கூட்டின் வடிவமைப்பு, மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும், நியூ செஞ்சுரி பத்தக நிறுவனம், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்கூடு&oldid=3741588" இலிருந்து மீள்விக்கப்பட்டது