தேன்மொழி (இதழ்)

தேன்மொழி ஈழத்தில் கவிதைகளுக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகும். புரட்டாதி 1955 இல் முதன்முதலில் வெளிவந்த மாத இதழான தேன்மொழியின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் வரதர் ஆவார். இணையாசிரியராக மஹாகவி உருத்திரமூர்த்தி பணியாற்றினார். தேன்மொழி பதினாறு பக்கங்களுடன் அழகிய சிறிய அமைப்பில் வெளியானது. மொத்தம் ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்மொழி_(இதழ்)&oldid=1521928" இலிருந்து மீள்விக்கப்பட்டது