தேபி பிரசாத் சட்டோபாத்யாயா
தேபி பிரசாத் சட்டோபாத்யாயா (பிறப்பு: நவம்பர் 5, 1933) என்பவர் புது தில்லியில் உள்ள இந்தியத் தத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் நிறுவனர்/தலைவர் ஆவார். இவர் நாகரிகங்கள் பற்றிய ஆய்வு மையத்தின் தலைவராகவும், இந்தியாவின் பண்பாடு, இந்திய அறிவியல், தத்துவம் மற்றும் கலாச்சார வரலாற்றுத் திட்டத்தின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார்.
சட்டோபாத்யாயா கலாச்சாரம் மற்றும் தத்துவம் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2009ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]
புத்தகங்கள்
தொகு- 1967 தனிநபர்கள் மற்றும் சமூகங்கள்: ஒரு முறைசார் ஆய்வு
- 1976 வரலாறு, தனிநபர்கள் மற்றும் உலகம்
- 1980 ரூபா, ராசா ஓ சுந்தரா (வங்காளத்தில்)
- 1988 ஸ்ரீ அரவிந்தர் மற்றும் கார்ல் மார்க்சு
- 1990 மானுடவியல் மற்றும் அறிவியல் வரலாறு
- 1991 தூண்டல், நிகழ்தகவு மற்றும் சந்தேகம்
- 1997 சமூகவியல், கருத்தியல் மற்றும் கற்பனாவாதம்
மேற்கோள்கள்
தொகு