தேரதரன் சங்ககாலப் புலர்களில் ஒருவர். தேரதரனார் என்று கூறாது இவரது பெயர் தேரதரன் என்று கூறப்பட்டிருப்பதால் இப் புலவரை ஓர் அரசன் என்றோ தேரோட்டி என்றோ கொள்ளவேண்டியுள்ளது. குறுந்தொகை 195 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகக் காணப்படுகிறது.

குறுந்தொகை 195 பாடல் சொல்லும் செய்தி தொகு

கலைஞன் ஒருவன் பாவை பொம்மை ஒன்று செய்து வைத்துள்ளான். அது இன்னும் சுடப்படவில்லை. வாடைக் காற்று ஊதுகிறது. பாவைப்பொம்மை காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைகிறது.

தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் குறிப்பாக மாலை வேளையில் தலைவியின் நிலை அந்தப் பாவைப்பொம்மை போல் ஆயிற்றாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரதரன்&oldid=2718073" இலிருந்து மீள்விக்கப்பட்டது