தேராதுன் கால்வாய்கள்
தேராதுன் கால்வாய்கள் (Dehradun canals) என்பது இந்தியாவின் உத்தராகண்டத்தில் உள்ள தேராதூனில் ஒரு காலத்தில் பரவியிருந்த கால்வாய்களின் பாரம்பரிய வலையமைப்பைக் குறிக்கிறது. ஆரம்பக்காலத்தில் ராஜ்பூர் கால்வாயுடன், 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தது. 2000ஆம் ஆண்டில் நகரம் மாநில தலைநகராக மாறிய பிறகு, விரைவான மற்றும் திட்டமிடப்படாத சாலை விரிவாக்கத் திட்டங்களால் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கால்வாய்களை மூடுவதற்கும் சில சந்தர்ப்பங்களில் சிதைக்கவும் வழிவகுத்தன. கடைசியாக மீதமுள்ள கால்வாய்களில் ஒன்று 2007-ல் மூடப்பட்டது.[1]
கால்வாய்களின் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து பொதுமக்கள் எதிர்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆலோசனைகள் இருந்தபோதிலும், இவை எப்போதும் அதிகரித்து வரும் போக்குவரத்திற்கு இடமளிக்க மூடப்பட்டன.[2] பல சுற்றுச்சூழல் குழுக்கள் வரலாற்று வலையமைப்பின் மறுமலர்ச்சிக்காகப் பிரச்சாரம் செய்தன. இதன் அழகியல் மதிப்பு மற்றும் நகரத்தின் நகர்ப்புற சூழல் மற்றும் நுண்காலநிலையில் நேர்மறையான விளைவுகளை மேற்கோள் காட்டின.[2][3] தற்போது, உத்தராகண்டு அரசு கால்வாய் வலையமைப்பை புதுப்பிக்கவோ அல்லது மீட்டெடுக்கவோ எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
வரலாறு
தொகு17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதல் கால்வாயான ராஜ்பூர் கால்வாயின் கட்டுமானம் கார்வாலின் ராணி கர்ணாவதியால் செயல்படுத்தப்பட்டது.[4]1850களில் பொறியாளர் ப்ரோபி காட்லி ஐந்து கால்வாய்களை விரிவுபடுத்தியபோது, கால்வாய் வளர்ச்சியின் அடுத்த கட்டம் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.
முக்கியத்துவம்
தொகுஇந்த கால்வாய்கள் நகரின் இயற்கையான வடிகால் ஓட்டத்தை உறுதி செய்கின்றன. இது தண்ணீர் தேங்குவதைத் தடுக்கிறது. இது இன்று நகரத்தில் வழக்கமாகக் காணப்படுகிறது. தேராதுனில் பாசுமதி அரிசி வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய இந்த கால்வாய்கள் பயன்படுகின்றன.[1] நகரின் குறுக்கே தண்ணீர் ஓடுவதால், குளிர்ச்சியான நுண்சூழல் காணப்படுகிறது. இடிக்கப்பட்ட அல்லது மூடப்பட்ட கால்வாய்களில் காலாபதர், பிஜாப்பூர், ராஜ்பூர் மற்றும் ஜகான் கால்வாய்கள் அடங்கும். கலங்கா கால்வாய், நகரின் புறநகரில் இருப்பதால், தப்பித்துள்ளது. பிஜப்பூர் கால்வாயின் சில பகுதிகள் இன்னும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The missing canals of Dun - Times of India". The Times of India.
- ↑ 2.0 2.1 "How 'City of Canals' lost its tag | Dehradun News - Times of India". The Times of India.
- ↑ "Canals Vanishing Due to Increasing Population - Breaking Uttarakhand News". pioneeredge.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
- ↑ Rawat, Ajay S. (24 November 2002). Garhwal Himalayas: A Study in Historical Perspective. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871368 – via Google Books.