தேவதாஸ் தேவபிரபாகரா
தேவதாஸ் தேவபிரபாகரா (Devadas Devaprabhakara) (1932-1978) ஒரு இந்திய கரிம வேதியியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.[1] இவர் சுழற்சி அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளையம் பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்பட்டார்.[2]
தேவதாஸ் தேவபிரபாகரா | |
---|---|
பிறப்பு | இந்தியா | 13 நவம்பர் 1932
இறப்பு | 12 சனவரி 1978 |
தேசியம் | இந்தியா |
துறை | |
பணியிடங்கள் | |
அறியப்படுவது | சுழற்சி அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளையம் பற்றிய ஆய்வு |
விருதுகள் |
வளைய அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளைய டையீன்களின் ஒடுக்கம், அவற்றின் குறைப்பு, நீர்போரேற்றல் மற்றும் மாற்றியமாக்கல் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் மற்றும் பல சுழற்சி நீர்க்கரிமங்களின் தொகுப்பு ஆகியவை அடி மூலக்கூறுகளின் புரிதலை பகுத்தறிவதில் உதவியது.[3] தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒப்பார்க்குழு மீளாய்வு செய்யக்கூடிய கட்டுரைகளாக வெளியிட்டார். பல சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் மூலம் இவர் தனது ஆய்வுகளை வெளியிட்டார்.[4] இந்திய அறிவியல் அகாடமியின் இன்லைன் களஞ்சியம் அவற்றில் 48 பட்டியலிடப்பட்டுள்ளது.[5] இந்திய அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.[6] விஞ்ஞான ஆராய்ச்சிக்கான இந்திய அரசாங்கத்தின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், 1976 ஆம் ஆண்டில் இவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை இவரது இரசாயன அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக வழங்கி கெளரவித்தது.[7]
இறப்பு
தொகு12 ஜனவரி 1978ல் தனது 38ஆவது வயதில் இவர் காலமானார்.[6]
உசாத்துணை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "A Regio-and Stereo-Specific Addition of Iodine Azide to C-9 and C-13 Cyclic Allenes". Sr. S. N. Moorthy. 2016. Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2023-04-11.
- ↑ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
- ↑ "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 2016. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.
- ↑ "Records". Science Central. 2016. Archived from the original on 2016-12-01. பார்க்கப்பட்ட நாள் 2023-04-11.
- ↑ "Browse by Fellow". Indian Academy of Sciences. 2016.
- ↑ 6.0 6.1 "Fellow profile". Indian Academy of Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
- ↑ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Bal Krishan Kaul; Arvind P. Kudchadker; Devadas Devaprabhakara (1973). "Investigation of temperature dependence of the interaction second virial coefficient using gas–liquid chromatography". J. Chem. Soc., Faraday Trans. 1 69: 1821–1826. doi:10.1039/F19736901821.