தேவதாஸ் (1937 திரைப்படம்)
தேவதாஸ் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "நியூ தியேட்டர்ஸ்" எனும் பட நிறுவனம் தயாரித்து, பி. வி. ராவ், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. ராவ், டி. எஸ். கிருஷ்ண ஐயங்கார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
தேவதாஸ் | |
---|---|
இயக்கம் | பி. வி. ராவ் |
தயாரிப்பு | நியூ தியேட்டர்ஸ் |
நடிப்பு | பி. வி. ராவ் டி. எஸ். கிருஷ்ண ஐயங்கார் டி. எம். ராமசாமி பிள்ளை சுப்பிரமணிய பாகவதர் ஜி. பி. ராஜாயி எஸ். என். விஜயலட்சுமி எம். ஏ. ராஜாமணி |
வெளியீடு | 1937 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உப தகவல்
தொகு"தேவதாஸ்" என்ற தலைப்பில், பல மொழிகளில், பல படங்கள் வெளிவந்துள்ளன. பேசும் படங்களில் முதலில் 1935 ஆம் ஆண்டு வங்காள மொழியில் இத்திரைப்படம் வெளியானது. சரத் சந்திர சட்டெர்ஜி என்ற வங்காள நாவலாசிரியரின் கதையே திரைப்படமாக ஆக்கப்பட்டது. இதே திரைப்படம் இந்தி மொழியில் கே. எல். சைகால் நடிப்பில் தயாரிக்கப்பட்டு, இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அத் திரைப்படத்துக்காக சைகால் தமிழில் பாடிய இரண்டு பாடல்கள் வெளி இணைப்புகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதே கதையை வைத்து 1936 ஆம் ஆண்டு நியூ தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தமிழில் தயாரித்து 1937 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]
இதே தேவதாஸ் தலைப்பில் 1953 ஆம் ஆண்டு தமிழில் மீண்டும் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 19 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2021.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் கூவியே பாடுவாய் கோமள கிளியே - தேவதாஸ் 1935 படத்திற்காக கே. எல். சைகால் பாடிய பாடல்.
- யூடியூபில் மதன் ஏவும் கணையால் மகா மோகம் - தேவதாஸ் 1935 படத்திற்காக கே. எல். சைகால் பாடிய மற்றொரு பாடல்.