தேவன் சர்மா

அமெரிக்க தொழிலதிபர்

தேவன் சர்மா (Deven Sharma, பிறப்பு 1956, சார்க்கண்ட், இந்தியா) மக்ராஹில் நிறுவனங்களில் ஒன்றான இசுடாண்டர்ட் அண்ட் புவர்சின் தலைவர் ஆவார்[1]. 2006ஆம் ஆண்டு சர்மா இசுடாண்டர்ட் அண்ட் புவர்சில் முதலீட்டுச் சேவைகள் மற்றும் உலகளாவிய விற்பனைப் பிரிவுகளுக்கான செயல் துணைத்தலைவராக சேர்ந்தார். தனது பங்களிப்பால் நிறுவனத்தின் உயர்ந்த நிலைக்கு காரணமான சர்மா எஸ் & பி 2011 சூலையில் ஐக்கிய அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டை குறைத்த பின்னர் பலத்த அரசியல் விமரிசனங்களுக்கு ஆளானார். இதன் பின்னணியில் ஆகத்து 23, 2011 அன்று தமது தலைவர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். 2011ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட இருக்கும் இவரை அடுத்து டக்ளசு பீடர்சன் பொறுப்பேற்கிறார் இசுடாண்டார்ட் & புவர்சில் சேர்வதற்கு முன்னர் சர்மா மக்ராஹில் நிறுவனங்களில் உலகளாவிய வணிகயுத்தித் துறை செயல் துணைத்தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

தேவன் சர்மா
பிறப்பு1956 (அகவை 68–69)
தன்பாத், சார்க்கண்ட், இந்தியா
இருப்பிடம்நியூயார்க் நகரம்
படித்த கல்வி நிறுவனங்கள்டி நோபிளி பள்ளி தன்பாத்
பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்
விசுகான்சின் பல்கலைக்கழகம்–மில்வாக்கி
ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகம்
பணிதலைவர் இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
கிரைசில் லிட்

மேள்கோள்கள்

தொகு
  1. "Executive Profiles, Operations, Deven Sharma". The McGraw-Hill Companies. Archived from the original on 2010-06-26. பார்க்கப்பட்ட நாள் 2009-02-23.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவன்_சர்மா&oldid=3559462" இலிருந்து மீள்விக்கப்பட்டது