தேவாரத் திரட்டு
தேவாரத்தில் 8266 பாடல்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் பாராயணம் செய்ய உகந்த வகையில் 99 பாடல்கள் திரட்டப்பட்டு தேவாரத்தில் உள்ள அதே குறிப்புகளோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் காலம் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. தொகுத்தவர் சைவ சமய ஆசாரியரான உமாபதி சிவாசிரியர். இவர் ‘திருவருட்பயன்’ என்னும் சித்தாந்த சாத்திரம் ஒன்று செய்துள்ளார். அதில் உள்ள 10 அதிகாரங்களின் தலைப்புக்குப் பொருந்துமாறு 99 பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005