தேவிபிரசாத் திவிவேதி
தேவிபிரசாத் துவிவேதி, இந்திய எழுத்தாளரும், சமசுகிருத இலக்கியவாதியும் ஆவார்.[1] 2011ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கி சிறப்பித்தது.[2]
தேவிபிரசாத் திவிவேதி | |
---|---|
பிறப்பு | October 20, 1956 வாரணாசி, உத்தா பிரதேசம், இந்தியா | (வயது 68)
பணி | கல்வியாளர், எழுத்தாளர் |
விருதுகள் | பத்மசிறீ ஆச்சாரிய ரத்னா சத்ரபதி சிவாஜி சம்மான் காசி கவுரவ அலங்காரன் வேத பண்டிதர் விருது |
வாழ்க்கைக்குறிப்பு
தொகுஇவர் 1956ஆம் ஆண்டில் அக்டோபர் இருபதாம் நாளில், வாரணாசியில் பிறந்தார்.[3] சமூகவியலுக்கான முதுநிலைப் பட்டத்தை வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர், சம்பூர்ணானந்து சமசுகிருத பல்கலைக்கழகத்தில் சாகித்யாச்சாரியா, ஆச்சாரியா ஆகிய பட்டங்களை பெற்றார். இந்த பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]
பின்னர், இதே பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராக சேர்ந்தார்.[4] பவுத தர்சன் மீமான்சா, சித்ர சம்பு காவ்யச சசமிக்சம் சம்பதனம், சமசுகிருத துவனி விஞ்ஞான், காவ்ய சாஸ்திரீய பரிபாஷிக் சப்தோன் கி நிருக்தி[5] உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார்.
இவர் ஆச்சாரிய ரத்னா, வேத பண்டிதர் விருது, சத்ரபதி சிவாஜி சம்மான், காசி கவுரவ அலங்காரன், பத்மசிறீ, பத்மபூசண் உள்ளிட்ட விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.[3][6]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "PM India". Prime Minister's Office. November 8, 2014. பார்க்கப்பட்ட நாள் November 27, 2014.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
- ↑ 3.0 3.1 3.2 "SSUV" (PDF). SSUV. 2014. பார்க்கப்பட்ட நாள் November 27, 2014.
- ↑ "TOI". TOI. January 26, 2011. பார்க்கப்பட்ட நாள் November 27, 2014.
- ↑ Deviprasad Dwivedi (2007). Kavyashastriy Paribhashik Shabdon ki Nirukti. Sampurnanand Sanskrit University. அமேசான் தர அடையாள எண் B00KLFBXYQ.
- ↑ 3 from Kashi make it to Padma list - Times of India