தேவிபுரம் (இலங்கை)
தேவிபுரம் (இலங்கை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு குடியேற்ற கிராமமாகும். இதன் எல்லைகளாக வடக்கே சிறுகடல், தெற்கே ஏ-35 பிரதான வீதி, கிழக்கே நாவலடி ஆறு, மேற்கே காளி கோயில் ஆறு என்பவை எல்லைகளாக அமைந்துள்ளன. தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக இந்த குடியேற்த்திட்டம் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் இருந்தும் தீவக பகுதிகளில் இருந்தும் ஆரம்பத்தில் மக்கள் குடியேறி இருந்தாலும் 80 களின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இக்கிராமத்தில் குடியேறி உள்ளனர். கணேஷ் குடியிருப்பு, நடேசம்மான் குடியிருப்பு, அத்தார் திட்டம் என்பவை இக்கிராமத்தில் கிழக்கு மாகாண மக்களின் குடியிருப்பு பகுதிகளாகும்.
இக்கிராமம் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் உருவான கிராமம் என்றபோதும், பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்களும் செங்கல் கட்டிட இடிபாடுகளும் மக்கள் இக்கிராமத்தில் குடியேறிய காலத்தில் காணப்பட்டது. அவ்வாறு பழைய கோயில் ஒன்றின் இடிபாடுகள் இருந்த இடமே இன்றைய தேவிபுரம் பழைய பிள்ளையார் கோயிலாகும்.
தேவிபுரம் கிராமம் ஒரு கிராம அலுவலர் பிரிவாகவும் "அ பகுதி" "ஆ பகுதி" என்று இரு கிராம பிரிவுகளாகவும் உள்ளது. பெரும்பாலும் தென்னந் கோப்புகளாக இருந்தாலும் ஏனைய பயிர்ச்செய்கைகளும் குறிப்பிட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாடசாலைகள்
- தேவிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
ஆலயங்கள்
- தேவிபுரம் ஆதிசிவன் கோயில்
- தேவிபுரம் பழைய பிள்ளையார் கோயில் (ஆ பகுதி)
- தேவிபுரம் சிவலிங்க பிள்ளையார் கோயில் (ஆ பகுதி)
- தேவிபுரம் முனியப்பர் கோயில்
- நடேசம்மான் குடியிருப்பு முத்துமாரி அம்மன் ஆலயம்
- நடேசம்மான் குடியிருப்பு நாகதம்பிரான் கோயில்
- தேவிபுரம் பிள்ளையார் கோயில் ( ஆ பகுதி)
- கணேஷ் குடியிருப்பு கண்ணன் கோயில்
- கணேஷ் குடியிருப்பு முத்துமாரி அம்மன் ஆலயம்
- பாரதிவீதி முத்துமாரி அம்மன் ஆலயம்
- பாரதிவீதி நாகதம்பிரான் ஆலயம்