தே–ல் குக்கு
தே–ல் குக்கு ( Te-l Khukhu ) என்பது இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள விஸ்வேமா கிராமத்தில் 13 ஆம் தேதி சூன்யி (ஜூலை) அன்று நடைபெறும் வருடாந்திர திருவிழா ஆகும். இது உணவைப் பகிர்வதன் மூலம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்களுடன் தொடர்புடையது.[1][2][3]
தே–ல் குக்கு | |
---|---|
கடைபிடிப்போர் | விசுவேமா மக்கள் |
வகை | பண்பாடு |
நிகழ்வு | வருடா வருடம் |
புராணக் கதை
தொகுஒரு நாள் ஒரு இளம் பெண் ஒரு பெரிய குளத்தின் நடுவில் ஒரு பழுத்த தினைச் செடியை பார்த்தாள். அதைப் பறிக்க அவள் ஒரு அணிலை ( தெலி ) அனுப்பினாள். ஆனால் அணில் திரும்பவில்லை. பின்னர் அவள் ஒரு கிளியை ( ஓகா ) அனுப்பினாள். ஆனால் பறவை அதற்கு பதிலாக தினையை சாப்பிட ஆரம்பித்தது. இறுதியாக, அந்தப் பெண் ஒரு தேரையிடம் ( தே–ல் ) உதவி கேட்டாள். அந்த தேரை அவளுக்கு ஒரு தினையைக் கொண்டு வந்தது. தேரைக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தினை வழங்குவதாக உறுதியளித்தாள். இவ்வாறு தேரைக்கு உணவைப் பரிமாறும் ( தே–ல் குக்கு ) திருவிழா உருவானது. பண்டிகை உணவு தயாரிப்பதில் தினை மிக முக்கியமான பொருளாக உள்ளது.
பழக்கவழக்கங்கள்
தொகுதேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டை அலங்கரிப்பதற்காக இளம் பெண்கள் காட்டுப் பூக்களை சேகரிப்பதன் மூலம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இஞ்சி மற்றும் பாறை பட்டாம்பூச்சி அல்லிகள், மென்மையான மக்காச்சோளப் பூக்கள் ஆகியன பொதுவாகப் பயன்படுத்தப்படும் மலர்கள். ஆன்மீகச் சடங்குகள் ஒரு காலத்தில் நிகழ்த்தப்பட்டன. ஆனால் கிறிஸ்தவத்தின் வருகையுடன் அது மறைந்துவிட்டன. நவீன மரபுகள் பகிர்வு மற்றும் சமூக பிணைப்புகளில் கவனம் செலுத்துகின்றன. [1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Sothu, Neithono.: Resurgence, 2013. Viswema Students' Union. Viswema. pp. 36–37.
- ↑ "Viswema celebrates Te–l Khukhu festival". Eastern Mirror Nagaland. 7 July 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
- ↑ "This unique festival in Nagaland is celebrated to honour the girl child". East Mojo. 22 July 2021. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.