தே. மா. தர்மாதிகாரி
தேவதத்தா மாதவ் தர்மாதிகாரி (Devdatta Madhav Dharmadhikari) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். 1940 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் தேதியன்று இவர் நாக்பூரில் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று பதவிக்கு வந்து 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் தேதியன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 1990 ஆம் ஆண்டு சூலை 27 ஆம் தேதி அதே உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று குசராத்து உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது தந்தை யசுவந்த் தர்மாதிகாரி ஒரு மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார்.[1][2] மின்சார பயன்பாட்டுத் துறையில் ஆந்திராவுக்கு 613 ஊழியர்களையும், தெலுங்கானா 502 ஊழியர்களையும் ஒதுக்குவதற்கான முடிவை தர்மாதிகாரி குழு தீர்ப்பளித்தபோது, ஆந்திரப் பிரதேச மின் பயன்பாடு உறுப்பினர்கள் அதை எதிர்த்தனர். மேலும் இவரது அறிக்கையை ஒருதலைப்பட்சமாக இருந்ததாகவும் விமர்சித்தனர். [3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Justice D M Dharmadhikari sworn in Supreme Court judge". Zee News (in ஆங்கிலம்). 5 March 2002. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
- ↑ "High Court of Gujarat". gujarathighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
- ↑ "Dharmadhikari committee report is one-sided: Andhra Pradesh power utilities". The New Indian Express. 29 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
- ↑ Era, Legal (8 September 2016). ""Guru-Shisya Parampara as is still in vogue in music field is also most suitable in legal field." says Hon'ble Justice D.M. Dharmadhikari, Former Judge". www.legaleraonline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.