தே. லூர்து
வார்ப்புரு:தகவல்சட்டம் நபர் தே. லூர்து (D. Lourdu சூன் 26 1937 - 5 ஏப்பிரல் 2008) தமிழ்நாட்டைச்சார்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், பேராசிரியர்.[1] இவர் பர்மாவில் ஐராவதி ஆற்றங்கரையில் உள்ள தாந்தபீன் என்ற ஊரில் 1937 சூன் 26 ஆம் நாள் அன்று பிறந்தவர். தமிழரின் நாட்டார் வழக்காற்றில் கல்விப்புலத்திற்கான அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டவர்.[2]
பணி
தொகுதே. லூர்து பாளையங்கோட்டையிலுள்ள தூய சவேரியர் கல்லூரியில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றியதோடு இதேக்ககல்லூரியில் 1987 இல் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தினைத் தொடங்கி அதன் இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார்.[3] நா. வானமாமலையைப் பின்பற்றி நாட்டுப்புறவியல் என்னும் சொல்லுக்கு மாற்றாக நாட்டார் வழக்காற்றியல் என்னும் கலைச்சொல்லினை நிலைப்படுத்தினார்.[4] தமிழில் சாலை இளந்திரையனுக்கும் பெருமாளுக்கும் பிறகு தமிழ்ப்பழமொழிகள் குறித்த முனைவர்ப்பட்ட ஆய்வினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு பழமொழிகளின் செயற்பாட்டியல் ஆய்வினை முன்னெடுத்துள்ளார்.[5]
விருதுகள்
தொகுநாட்டர் வழக்காறியல் கல்விப்புலத்தில் இவரின் முன்னடுப்புகளையும் பங்களிப்புகளையும் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு குறள்பீட விருதை 2000இல் வழங்கியுள்ளது.[6]
எழுதிய நூல்கள்
தொகுதே. லூர்து பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்.
- தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு (முனைவர் பட்ட ஆய்வேடு (1980)[7]
- நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் (1976).[8]
- நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு (1986).[9]
- தமிழ்ப்பழமொழிகள்:அமைப்பு, பொருண்மை, செயல்பாடு (2007), [10], [11]
- சூழலியம் பழமொழிகளை முன்வைத்து (2008).[12]
- நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள் (2008).[13]
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-23. பார்க்கப்பட்ட நாள் 2018-01-18.
- ↑ லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2018-01-18.
- ↑ http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611111.htm
- ↑ http://www.jeyamohan.in/2240#.WmDp5jfhXIU
- ↑ லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
- ↑ நாட்டார் வழக்காற்றியல்:சில அடிப்படைகள்
- ↑ லூர்து, தே, 1976, நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம், பாரிவேல் பதிப்பகம்: பாளையங்கோட்டை
- ↑ லூர்து, தே, 1986, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், பாரிவேல் பதிப்பகம்: பாளையங்கோட்டை
- ↑ லூர்து, தே, 2008, தமிழ்ப்பழமொழிகள்:அமைப்பு, பொருண்மை, செயல்பாடு, சென்னை: தமிழினி
- ↑ http://www.teamfours.com/library/books/details/29486.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
- ↑ லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை