தைப்பாவை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

தை மாத முதல்நாள் பொங்கல். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மூன்றாம் நாள் கன்னிப்பொங்கல். இந்த நாளைக் கரிநாள் எனக் கூறுவர். கரிநாள் என்னும் தொடரிலுள்ள கரி சான்று என்னும் பொருளைத் தரும்.[1]

கண்ணால் பார்ப்பது கரி. எனவே கரிநாள் என்பது காணும் பொங்கல் நாள் ஆயிற்று. நாட்டுப்புறங்களில் இந்த நாளில் பாய்ச்சல்காளை விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர். காணும் பொங்கல் நாளைக் 'கன்னிப்பொங்கல் நாள்' என்றும் சில வட்டாரங்களில் கொண்டாடி மகிழ்வர். அன்று கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டு மகிழ்வர்.

கூட்டாஞ்சோறு ஆக்கும்போது பாட்டும் பாடப்படும்.

ஆடிப் பாடி வந்தோம், அரிசிப் பருப்பைப் போடுங்கள்
கன்னிப் பெண்கள் வந்தோம், காய்கறியைப் போடுங்கள்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

கருவிநூல்

தொகு
  • மு.வை.அரவிந்தன், தமிழக நாட்டுப்பாடல்கள், பாரிநிலையம் வெளியீடு, 1977

அடிக்குறிப்பு

தொகு
  1. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார் கோமான்
    இந்திரனே நாலும் கரி - திருக்குறள் 25
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைப்பாவை&oldid=1011118" இலிருந்து மீள்விக்கப்பட்டது