தையால்
தையால் அல்லது தையோ ஆல்டிகைடு (Thial or Thioaldehyde) என்பது வேதி வினைக்குழுக்களில் ஒரு வகையாகும். ஆல்டிகைடைப் போலவே இருக்கும் இவ்வினைக்குழுவில், ஆல்டிகைடில் உள்ள ஆக்சிசன் அணுவுக்குப் பதிலாக கந்தக அணு இடம்பெற்றிருக்கும். தையாலைக் குறிக்கப் பயன்படும் பொது வாய்ப்பாட்டில் (RC (S) H) இல் உள்ள R , ஆல்க்கைல் அல்லது அரைல் குழுவைக் குறிக்கிறது. தையோ கீட்டோன்களைவிட தையோ ஆல்டிகைடுகள் மிகவும் வினைத்திறன் மிக்கவையாகும். தடையில்லாத வினைத்திறன் மிக்க இத்தையோ ஆல்டிகைடுகளை தனித்துப் பிரித்தெடுக்க வேண்டும். உதாரணமாக, தையோபார்மால்டிகைடு H2C=S, வளைய முப்படி 1,3,5 முத்தையேனாக ஒடுக்கமடைகிறது. ஆனால் வெள்ளைப் பூண்டில் இருந்து கிடைக்கும் அல்லிசின், சிதைவடைதல் மூலமாக தையோ அக்ரோலின் H2C=CHCH=S, உருவாகிறது. பின்னர் தன்னிச்சையான டையீல்சு-ஆல்டர் வினையில் ஈடுபட்டு சமபகுதிச் சேர்மங்களான வினைலிருதையீன்களைத் தருகின்றது[1][2]. வினைத்திறன் மிகுந்த தையோ ஆல்டிகைடுகள் வெப்ப இயக்கவியலின்படியும் மிகுந்த நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. விண்மீன்களிடை விண்வெளியில் இவை ஒரு மற்றும் இரு டியூட்டரேற்றம் பெற்ற ஓரிட நிறைமாறிகளாக[3] பேரளவு கொள்ளிடத்தில் காணப்படுகின்றன. இங்கிருந்து நிலைப்ப்புத்தன்மை மிக்க தையோ ஆல்டிகைடுகளை தனித்துப்பிரிக்க முடியும்[4]
ஆரம்ப காலத்தில் தையோ ஆல்டிகைடுகள் இருப்பது பொறிச்சிறை செயல்முறைகள் வழியாக உய்த்துணரப்பட்டது. எடுத்துக்காட்டாக, Fc2P2S4 உடன் பென்சால்டிகைடு புரிகின்ற வினையே தையோ பென்சால்டிகைடு உருவாக்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவ்வினையில் ஒரு வளைய கூட்டுப்பொருளுடன் உருவாகும் இருதையோபொசுபீன் C2PS3 வளையத்தைத் தருகிறது[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ H. W. Kroto, B. M. Landsberg, R. J. Suffolk, A. Vodden (1974). "The photoelectron and microwave spectra of the unstable species thioacetaldehyde, CH3CHS, and thioacetone, (CH3)2CS". Chem. Phys. Lett. 29 (2): 265–269. doi:10.1016/0009-2614(74)85029-3. Bibcode: 1974CPL....29..265K.
- ↑ E. Block (2010). Garlic and Other Alliums: The Lore and the Science. Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-190-7.
- ↑ http://www.astro.uni-koeln.de/site/vorhersagen/molecules/ism/H2CS.html
- ↑ N. Takeda, N. Tokitoh, R. Okazaki (1997). "Synthesis, Structure, and Reactions of the First Rotational Isomers of Stable Thiobenzaldehydes, 2,4,6-Tris[bis(trimethylsilyl)methyl]thiobenzaldehydes". Chem. Eur. J. 3: 62–69. doi:10.1002/chem.19970030111.
- ↑ A. Capperucci, A. Degl’Innocenti, P. Scafato, P. Spagnolo (1995). "Synthetic Applications of Bis(trimethylsilyl)sulfide: Part II. Synthesis of Aromatic and Heteroaromatic o-Azido-Thioaldehydes". Chemistry Letters 24 (2): 147. doi:10.1246/cl.1995.147.