தையோகார்பனேட்டு

தையோகார்பனேட்டு (Thiocarbonate) என்பவை CS3-xOx2− (x = 0, 1, or 2) என்ற பொது வேதி வாய்ப்பாடு கொண்ட எதிர்மின் அயனிகளின் குடும்பத்தைப்பற்றி விவரிப்பவையாகும். இவ்வெதிர்மின் அயனிகளின் கட்டமைப்பை ஒத்த கரிமச்சேர்மங்கள் யாவும் தையோகார்பனேட்டுகள் எனப்படுகின்றன.

கார்பனேட்டு ஈரெதிர்மின் அயனிகளைப் போல தையோகார்பனேட்டுகள் கார்பன் மையங்களைக் கொண்ட சமதளங்களாகும். கார்பன் முதல் கந்தகம் அல்லது ஆக்சிசன் வரையிலான இவற்றின் சராசரி பிணைப்பு வரிசை 1.33 ஆகும். மேலும், இவற்றின் புரோட்டானேற்றம் தொடர்பான சிறப்புக் குறிப்புகள் வழக்கம் போல ஏதுமில்லை. தையோகார்பனேட்டுகள் நல்ல மின்னணு மிகுபொருட்களாகவும் நல்ல ஈனிகளாகவும் செயல்படுகின்றன.[1]

ஒருதையோகார்பனேட்டு

தொகு

CO2S2− என்ற வாய்ப்பாடு கொண்ட ஈரெதிர்மின் அயனிகள் ஒருதையோகார்பனேட்டுகள் எனப்படுகின்றன.இவை C2v சீரொழுங்குடன் காணப்படுகின்றன. தையோபாசுசீனை நீராற்பகுத்து அல்லது கார்பனைல் சல்பைடுடன் ஒரு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்யும் போது ஒருதையோகார்பனேட்டு தோன்றுகிறது.

COS + 2 NaOH → Na2CO2S + H2O

இருதையோகார்பனேட்டு

தொகு

COS22− என்ற வாய்ப்பாடு கொண்ட ஈரெதிர்மின் அயனிகள் இருதையோகார்பனேட்டுகள் எனப்படுகின்றன. இவையும் C2v சீரொழுங்குடன் காணப்படுகின்றன. கார்பன் இருசல்பைடுடன் ஒரு காரத்தின் நீர்க்கரைசலை வினைபுரியச் செய்யும் போது இருதையோகார்பனேட்டுகள் தோன்றுகின்றன.

CS2 + 2 NaOH → Na2COS2 + H2O

அனேகமாக பெரும்பாலான முக்கிய இருதையோகார்பனேட்டுகள் யாவும் கரிமச் சேர்மங்களின் வழிப்பொருட்களாகவே உள்ளன. சேந்தேட்டுகள் என்பவை கரிமகந்தகச் சேர்மங்களாகும். இவற்றை கார்பன் இருசல்பைடுடன் ஆல்காக்சைடுகளை வினைபுரியச் செய்வதன் மூலமாகத் தயாரிக்கலாம். (RS)2CO என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நடுநிலை இருதையோகார்பனேட்டுகளும் அறியப்படுகின்றன. இவை பெரும்பாலும் அவற்றுடன் தொடர்புடைய முத்தையோகார்பனேட்டுகளை நீராற்பகுப்பு செய்து தயாரிக்கப்படுகின்றன.உதாரணம்: நான்குதையாபென்டலீன்டையோனில் இரண்டு இருதையோகார்பனேட்டு குழுக்கள் உள்ளன.

முத்தையோகார்பனேட்டு

தொகு

CS32− என்ற வாய்ப்பாடு கொண்ட ஈரெதிர்மின் அயனி முத்தையோகார்பனேட்டு எனப்படுகிறது. இது D3h சீரொழுங்குடன் காணப்படுகின்றன. ஆதார கந்தகத்துடன் கார்பன் இருசல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்:[2]

CS2 + 2 NaSH → Na2CS3 + H2S

பெர்தையோகார்பனேட்டு

தொகு

CS42− என்ற வாய்ப்பாடு கொண்ட ஈரெதிர்மின் அயனி பெர்தையோகார்பனேட்டு எனப்படுகிறது. முத்தையோகார்பனேட்டுடன் கந்தகத்தைச் சேர்ப்பதன் மூலம் இதைத் தயாரிக்கலாம். இச்சேர்மத்தில் ஒரு கந்தகம் - கந்தகம் பிணைப்பு காணப்படுகிறது.[3]
பெர்தையோகார்பானிக் அமிலம் அல்லது நான்குதையோகார்பானிக் அமிலம் , சிஏஎசு எண்#13074-70-9[4])[4]) இதுவரையில் தூய்மையான நிலையில் தொகுக்கப்பட்டதில்லை ஆனால், அடர் பழுப்புநிற கரைசலாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  2. R. E. Strube (1963). "Trithiocarbodiglycolic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV4P0967. ; Collective Volume, vol. 4, p. 967(a procedure for synthesis of K2CS3
  3. Sodium perthiocarbonate o PubChem
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.
  5. http://sulphur.atomistry.com/perthiocarbonic_acid.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தையோகார்பனேட்டு&oldid=3559551" இலிருந்து மீள்விக்கப்பட்டது