தொகுதிப் பிறப்பு

தொகுதிப் பிறப்பு (phylogeny) என்பது உயிரினங்கள் தங்கள் பரிணாம வரலாற்றில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாய் இருக்கின்றன என்பதை முன்வைக்கிறது.[1] எல்லா உயிரினங்களும் பொது பொது மூதாதையுடன் தொடர்புடையவை எனும் கருதுகோளை இது அடிப்படையாய்க் கொண்டது.

தொகுதிப் பிறப்பியல் ஆராய்ச்சிகளின் பயனாய் தொகுதிப் பிறப்பியல் கிளைப்படம் கிடைத்துள்ளது. இது மூதாதையில் இருந்து தொடர்புடைய இனங்கள் வந்ததைக் காட்டுகிறது. ஒப்பியல் உடற்கூறு, மூலக்கூறு உயிரியல், தொல்எச்சவியல் ஆகியவற்றின் உதவியுடன் தொகுப்பிறப்பியல் தரவுகள் பெறப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. King R.C. Stansfield W.D. & Mulligan P.K. 2006. A dictionary of genetics, 7th ed. Oxford.p336
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகுதிப்_பிறப்பு&oldid=1860183" இலிருந்து மீள்விக்கப்பட்டது