இயந்திரத் துப்பாக்கி

(தொடர்சுடுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எந்திரத் துப்பாக்கி (machine gun) அல்லது இயந்திரத் துப்பாக்கி என்பது ஒரு முழுத் தன்னியக்க சுடுகலன் ஆகும். இது நிலையாக நிறுவப்படலாம் அல்லது இயங்கும் வகையாகவும் அமையலாம். இவை ஒரு மணித்துளியில் 300 தடவை முதல் 1800 தடவைவரை தொடர்ந்து சுடும். இதற்கான குண்டுகள் சுடுகலத் தேக்கத்தில் இருந்தோ கவச வெடிமருந்துப் பட்டையில் இருந்தோ வேண்டிய குண்டுகளைப் பெறப்படும். என்றாலும், அனைத்து தன்னியக்கச் சுடுகலன்களும் எந்திரத் துப்பாக்கிகள் ஆகமாட்டா. சிற்றெந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கச் சுழல்துப்பாக்கிகள், முற்றுகைத் துப்பாக்கிகள், தன்னியக்க வீச்சுத் துப்பாக்கிகள், எந்திரக் குறுந்துப்பாக்கிகள் ஆகியவை முழுமையாக தன்னியக்கமாகச் செயல்படலாம் என்றாலும் இவை தொடர்ச்சியாகச் சுட வடிவமைக்கப்படவில்லை. படைத்துறையின் மிகுவேகத் துப்பாக்கி வகையான எந்திரத் துப்பாக்கிகள், பின்னணிக் காப்பு ஆய்தங்களாக வடிவமைக்கப்பட்டவையாகும். இவை பொதுவாக, தனிநிறுவல் அமைப்பில் இருந்தோ அல்லது தரையில் நிறுவப்பட்டுள்ள இருகாலிகள் அல்லது முக்காலிகள் மீது வைத்தோ சுடப் பயன்படுத்தப்படுகின்றன. பல எந்திரத் துப்பாக்கிகள் பட்டையூட்டக் குண்டுகளையோ திறந்த வீச்சுக் குண்டுகளையோ எறியும் தனி அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவ்வமைப்புகள் சுழல்துப்பாக்கிகளில் அமைவதில்லை.

ஒரு .50 அளவீட்டு எம்2 எந்திரத் துப்பாக்கி. சுற்றியுள்ளவை பயன்படுத்தப்பட்ட வெற்றுத் தோட்டாக்கள்: ஜான் பிரவுன் வடிவமைப்பு நீண்டகாலம் பயன்பாட்டிலுள்ள வெற்றிகரமான வடிவமைப்பு ஆகும்.
மேலே: IMI நெகெவ் வகை (மென் எந்திரத் துப்பாக்கி). கீழே: FN மாகு வகை (பொதுநோக்க எந்திரத் துப்பாக்கி).
செக்கொசுலோவாக்கிய 7.62 மிமீ பொது எந்திரத் துப்பாக்கிப் படிமம் 1959.

முதல் எந்திரத் துப்பாக்கி இராம் மேக்சிம் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இது மேக்சிம் துப்பாக்கி எனப்பட்டது.

ஐக்கிய அமெரிக்கத் துப்பாக்கிச் சட்டத்தில், "எந்திரத் துப்பாக்கி என்பது அளவீட்டைச் சாராமல் ஓரிழுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளைச் சுடும் ஆய்தமாகும்." எளிய கருவியாலோ அல்லது உறுப்பாலோ ஆல்லது ஒரு பகுதியாலோ நிலவும் சுடுகலனைத் திருத்தி எந்திரத் துப்பாக்கியாக செயல்படவைத்தாலும் அதுவும் எந்திரத் துப்பாக்கியாகும்.[2] அமெரிக்கக் கூட்டரசின் பல மாநிலங்களில் எந்தவொரு சட்டமும் தனிக் குடிமகன் எந்திரத் துப்பாக்கி வைத்திருப்பதைச் சட்டத்திற்குப் புறம்பானதாக்க் கருதமுடியாது. ஆனால் இவை தேசியச் சுடுகலன் சட்டப்படி, இலச்சினை வரியைக் கட்டிப் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். இப்போது சுட்டுகல ஆயுத உரிமையாளர் காப்புச் சட்டம், 1986 இன் அண்மையத் திருத்த்த்தின்படி, தனியருக்காக புதிதாக எந்திரத் துப்பாக்கி செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், மூதாதையரின் துப்பாக்கியை பரிமாறலாம்.

பருந்துப்பார்வை

தொகு
 
ஒரு மிட்சுபிசி வகை மென் சரக்குந்து உடல், சுமிடோமோ M2 பேரெந்திரத் துப்பாக்கி. வைக்கோலால் வண்டி மூடப்பட்டுள்ளது. நரசினோ ஆயுதப்பாடியில் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முடுக்கி விடுவிக்கப்பட்டதும் பிடிகொழுவால் மட்டுமே மீளமைக்கப்படுவதால், ஒவ்வொரு முடுக்கி இழுப்புக்கும் ஒருதடவை சுடும் பகுதித் தன்னியக்கச் சுடுகலன்களைப் போலல்லாமல், எந்திரத் துப்பாக்கி முடுக்கியைத் தொடர்ந்து அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்கும்வரை சுடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது இச்சொல் வெடிமருந்து தீரும்வரை தொடர்ந்துசுடும் அல்லது அடிக்கடி தீக்கனல்களைக் கக்கும் பேரெந்திரத் துப்பாக்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எந்திரத் துப்பாக்கிகள் எப்போதும் இயல்பாக படைவீரரையோ விமானங்களையோ சிற்றெந்திரத் துப்பாக்கிகளையோ எதிர்கொள்ளவும் நேரடியாக அல்லது மறைமுகமாக முற்றுகையிட்டு அடக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உயர் இயக்கச் சுடுதிறத்துக்காகப் பொதுவாக வேகமாகத் தாக்கும் ஊர்திகளில் நிறுவப்பட்டோ அல்லது ஆய்தமேந்திய தகரிகளில் பொருத்தியோ பயன்படுத்தப்படுகின்றன. இவை தகரி போன்ற பேரளவு படைக்கலங்கள் தேவையற்ற அளவு சிறியதாக எதிரிப் படை உள்ளபோதோ அல்லது திறம்பட எதிர்கொள்ளமுடியாதபடி பெருவேகத்துடன் அது செயல்படும்போதோ தரைப்படை இலக்குகளை எதிர்கொள்ளும் வான்படையின் தற்காப்பு நடவடிக்கையின்போதோ என பல நோக்கங்களின்போது பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் போர்விமானங்களில் பயன்படுத்துகையில் இவற்றோடு பேரளவீட்டு சுழல்துப்பாக்கிகளும் உடன்சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

நடைமுறையில் சில எந்திரத் துப்பாக்கிகள் பல மணிநேரம் தொடர்ந்து சுடுகின்றன; ஆனால், பிற தன்னியக்க ஆயுதங்களோ ஒரு மணித்துளி நேரத்துக்குச் சுடும்போதே மிகைச்சூடுறுகின்றன. அனைத்துவகை எந்திரத் துப்பாக்கிகளும் வேகமாகச் சூடுறுவதால், இவை தொடர்சுடுதலின் இடைவெளி நேரங்களில் காற்றால் குளிருவதற்காக திறந்த மரையாணி ஏந்தி அல்லது குதிரையை பயன்படுத்துகின்றன. இவற்றில் உருள்கலக் குளிர்த்தமைப்புகளோ அல்லது மெல்லச் சூடாகும் பேரெடை உருள்கலன்களோ அல்லது வெப்பமடைந்த உருள்கலன்களை நீக்கும் ஏற்பாடோ அமைந்திருக்கும்.

எந்திரத் துப்பாக்கிகள் பொதுவாக மென் எந்திரத் துப்பாக்கிகள், இடைநிலை எந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கப் பீரங்கிகள் அல்லது வன் எந்திரத் துப்பாக்கிகள், பொதுநோக்க எந்திரத் துப்பாக்கிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. மென் எந்திரத் துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகளுக்கான குண்டுகளையும், பிற எந்திரத் துப்பாக்கிகள் சுழல் துப்பாக்கிகளுக்கான குண்டுகளையும் பயன்படுத்துகின்றன. எந்திரத் துப்பாக்கிக்கும், தன்னியக்கப் பீரங்கிகளுக்கும் இடையிலான வேறுபாடு "அளவீடு" எனப் பொதுவாக அழைக்கப்படும் துப்பாக்கிக் குழலின் உள் விட்ட அளவால் தீர்மானிக்கப்படுகிறது. தன்னியக்கப் பீரங்கிகள் அல்லது வன் எந்திரத் துப்பாக்கிகள் 15 மிமீ அளவுக்கும் மேற்பட்ட உள் விட்டக் குழல் கொண்டவை. மென்வகையே காலாட்படைஞரின் சுடுகலனை விட மிகப் பெரியதாகும். இடைநிலை, வன் வகைகள் முக்காலி மீதோ ஊர்தியிலோ பொருத்தப்படுகின்றன; நடந்து சுடுகையில் எந்திரத் துப்பாக்கியையும் பிற கருவிகளையும் (முக்காலி, வெடிமருந்து, உதிரி உருள்கலன்கள்) கொண்டுசெல்ல கூடுதல் படைஞர்கள் தேவை.

மென் எந்திரத் துப்பாக்கிகள் படையணிக்கு இயங்குநிலைச் சுடுதல் அமைப்பாக அமையும்படி வடிவமைக்கப்படுகிறது. இவை காற்றால் குளிர்த்தப்படுகின்றன. இவை பேழை அல்லது உருள்கல வெடிமருந்து தேக்ககமும் இருகாலியும் கொண்டவை; இவை முழு அளவு சுழல்துப்பாக்கியின் குண்டுகளைப் பயன்படுத்திச் சுடும்; ஆனால், நிகழ்கால வகைகள் இடைநிலைச் சுழல்துப்பாக்கிக் குண்டுகளை மட்டுமே பயன்படுத்திச் சுடுகின்றன. இடைநிலை எந்திரத் துப்பாக்கிகள் முழு அளவு சுழல்துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்திச் சுடுகின்றன. இவை நிலையாக ஒரே இடத்தில் நிறுவும் முக்காலியின் குறிப்பிட்ட இருப்புகளில் நிறுவிச் சுடவல்லன. வல் எந்திரத் துப்பாக்கி எனும் சொல் முதல் உலகப் போரில் முதலில் தோன்றியது. இது உயரெடை இடைநிலை எந்திரத் துப்பாக்கிகளைக் குறிக்கப் பயன்பட்டு இரண்டாம் உலகப்போர் வரை யப்பானிய ஆட்சுகிசு எம் 1914 எந்திரத் துப்பாக்கி வகைகளைக் குறிக்க தொடர்ந்தது; இன்று, இது 12.7 மிமீ அளவீடு முதல் 20மிமீ அளவீட்டுத் தன்னியக்க ஆயுதங்களைக் குறிக்கிறது.[3] பொதுநோக்க எந்திரத் துப்பாக்கி வழக்கமாக ஒரு மெல்லெடை இடைநிலை எந்திரத் துப்பாக்கியைக் குறிக்கிறது. இது மெல் எந்திரத் துப்பாக்கியின் இருகாலியையும் உருள்கலனையுமோ அல்லது இடைநிலை எந்திரத் துப்பாக்கியின் முக்காலியையும் பட்டை மருந்தூட்டத்தையுமோ பயன்படுத்தலாம்.

அமெரிக்கப் படைத்துறையின் நெறிமுறை "படையணித் தன்னியக்க ஆயுதம்" எனும் வகையையும் உள்ளடக்குகிறது. இது ஒற்றைப் படைவீரரால் எந்திரத் துப்பாக்கி போலவல்லாமல் தன்னியக்கச் சுழல்துப்பாக்கியைப் போல இயக்கப்படுகிறது. ஆனால், செயல்பாட்டைப் பொறுத்தவரையில் இது எந்திரத் துப்பாக்கிதான். FM 3-22.68 "குழுச்சேவை எந்திரத் துப்பாக்கிகள்" எனும் கையேடு M249 எந்திரத் துப்பாக்கியை எந்திரத் துப்பாக்கியாகவோ தன்னியக்கச் சுழல்துப்பாக்கியாகவோ பயன்படுத்தும் முறைகளை விவரிக்கிறது: " M249 தன்னியக்கச் சுழல்துப்பாக்கியும் M249 எந்திரத் துப்பாக்கியும் இரண்டுமே முற்றொருமித்தனவாக உள்ளன; ஆனால், பயன்படுத்தும் முறை மட்டுமே வேறுபடுகிறது. M249 தன்னியக்கச் சுழல்துப்பாக்கி ஒரு தன்னியக்கப் படைவீரரால் இயக்கப்பட, இதன் வெடிமருந்து அப்படையணியின் மற்ற படைவீரர்களால் கொணர்ப்படுகிறது. M249 எந்திரத் துப்பாக்கியோ குழு சேவைக்கான ஆயுதமாகும்."[4]

எந்திரத் துப்பாக்கிகள் எளிய பார்வைக் கோட்டை உடையவை. ஆனால், அன்மையில் ஒளியியல் அமைப்புகளின் பயன்பாடு பரவலாக வழிக்கில் வந்துவிட்ட்து. நேரடி சுடுதலுக்கான பொதுவான குறிபார்க்கும் அமைப்பு திண்மக் குண்டுகளையும் பின்தொடர்வகைக் குண்டுகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறது. வழக்கமாக, ஒவ்வொரு நான்கு திண்மக் குண்டுகளுக்கு ஒரு பின்தொடர்வகைக் குண்டு பயன்படுதப்படுகிறது. எனவே எறிவளைவைப் பார்க்கலாம்; அதைப் பின்பற்ரி நடந்து இலக்கைநோக்கித் துல்லியமாகச் சுடலாம். மற்ற படைவீரர்களின் சுடுதலையும் சரியாக வழிப்படுத்தலாம்.

பிரவினிங் எம் 2 வகை .5 அளவீட்டுத் துப்பாக்கியைப் போன்ற பல உயரெடை எந்திரத் துப்பாக்கிகள் போதுமானத் துல்லியத்துடன் பெருந்தொலைவு இலக்குகளையும் சுடவல்லனவாக அமைகின்றன. வியட்நாம் போரின்போது, [[கார்லோசு ஃஆத்காக் நெடுநீளச் சுடுதலில் .50 அளவீட்டு எந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி, தொலைநோக்கியின் பார்வைவழி, 7382 அடி தொலைவுக்குச் சுட்டுப் புதுப்பதிவை எட்டினார்.[5] இது பாரட் M82 போன்ற .50 அளவீட்டுச் சுழல்துப்பாக்கியை அறிமுகப்படுத்த வழிவகுத்தது. இது எதிர்பொருள் சுழல்துப்பாக்கி எனப்படுகிறது.

இயக்குதல்

தொகு
 
நேரடி மொத்தல்
 
வளிம உந்துலக்கை

அனைத்து எந்திரத் துப்பாக்கிகளும் பின்வரும் இயக்கச் சுழற்சியைப் பின்பற்றுகின்றன:

  • கையாலோ மின்முறையாலோ சுடுநெம்பால் மரையாணிக் குதிரையை பின்னோக்கி பிடிகொழுவுடன் மரையாணிக் குதிரை இணையும்வரை இழுத்தலும் முடுக்கி அதை முன்னோக்கிச் செலுத்தும்வரை பின்னிருப்பிலேயே நிலைநிறுத்தலும்
  • புது தடவை சுடுதலுக்கான வெடிமருந்தை ஊட்டி, மரையாணிக் குதிரையை பூட்டுதலும்
  • பயனாகிய உறையை கலனில் இருந்து கழற்றி மரையாணி பின்னகரும்போது வெளியே எறிதல்
  • அடுத்த தடவை சுடுதலுக்கான வெடிமருந்தை சுடுகலனில் ஊட்டுதல். வழக்கமாக, பின்னுதைப்புச் சுருள்வில் இழுவிசை மரையாணியைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. அப்போது ஒரு நெம்புருள் ஊட்டும் அமைப்பில் அல்லது வெடிமருந்துப் பட்டை அல்லது பேழையில் இருந்து புதுதடவைக்கான வெடிமருந்தை உந்தித் தள்ளுகிறது.
  • இயக்குபவர் முடுக்கியைச் செயற்படுத்தும்வரை, இந்தச் சுழற்சி மீள மீள நிகழும். முடுக்கியை விடுவித்ததும் பிடிகொழுவில் இணைந்து முடுக்கி இயங்கமைப்பை மீளமைக்கும். அப்போது ஆயுதம் சுடுவதை நிறுத்திவிட்டு மரையாணிக் குதிரை முழுதும் பின்னோக்கி அமையும்.

இந்த இயக்கச் சுழற்சி, சுடுகலனை செயல்படுத்தும் இயங்கமைப்பைச் சாராமல், அனைத்துத் தன்னியக்கச் சுடுகலன்களுக்கும் அடிப்படையானதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hiram Maxim
  2. ஐக்கிய அமெரிக்கச் சட்டத்தில், தேசியச் சுடுகலன் சட்டம், 1934, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குறியீடு 26, 5845, b பிரிவின்படி, "... மாந்தனால் மீளச் சுமயேற்றப்படாத ஓரிழுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளைச் சுடும் எந்தவொரு ஆயுதமும் எந்திரத் துப்பாக்கி எனப்படும்."
  3. "Machine Guns and Machine Gun Gunnery," US Marine Corps
  4. U.S. Army Training and Doctrine Command Field Manual 3-22.68 "Crew-Served Machine Guns", para. 4-207
  5. Henderson, Charles. Marine Sniper Berkley Caliber. (2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-425-10355-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திரத்_துப்பாக்கி&oldid=3908002" இலிருந்து மீள்விக்கப்பட்டது